ஆறு லட்சம் யூனிட்கள்…விற்பனையில் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் சக்கைப்போடு

 

ஆறு லட்சம் யூனிட்கள்…விற்பனையில் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் சக்கைப்போடு

முதல் விற்பனையில் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் சுமார் 6 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.

டெல்லி: முதல் விற்பனையில் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் சுமார் 6 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.

இந்தியாவில் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் கடந்த 22-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இதன் முதல் ஃபிளாஷ் விற்பனை நேற்று (நவ.23) மதியம் 12.00 மணிக்கு தொடங்கியது. எப்போதும் சியோமி ஸ்மார்ட்போன்கள் ஃபிளாஷ் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்து விடும். அந்த வகையில் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனும் விற்பனை ஆரம்பித்த வெகு சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது.

அதாவது, முதல் விற்பனையில் மட்டும் சியோமி நிறுவனம் சுமார் ஆறு லட்சம் யூனிட்களை விற்பனை செய்ததாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் எம்.ஐ மற்றும் ஃபிளிப்கார்ட் வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் பிளாக் ஃபிரைடே சிறப்பு விற்பனையின் கீழ் புதிய ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையிலும், குறிப்பிட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துவோருக்கு ரூ.500 கூடுதல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

6.26 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்

அட்ரினோ 509 GPU

4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்

64 ஜி.பி. மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI

ஹைப்ரிட் டூயல் சிம்

12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9, 1.4μm பிக்சல், டூயல் பிடி ஃபோக்கஸ், EIS

5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா

20 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.0, 1.8μm

2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா

கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

4000 எம்.ஏ.எச் பேட்டரி

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ பிளாக், புளு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி விலை ரூ.13,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.