ஆறுமுகசாமி ஆணையத்தில் விஜயபாஸ்கர் ஆஜர்

 

ஆறுமுகசாமி ஆணையத்தில் விஜயபாஸ்கர் ஆஜர்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜரானார்.

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜரானார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக  ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது. 

அந்த வகையில் விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு கடந்த டிசம்பர் 18-ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், ஆணையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு ஆணையத்திற்கு அமைச்சர் விஜயபாஸ்கர்  கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து, விஜயபாஸ்கர் ஆஜராக வேண்டும் என ஆணையம் சார்பில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இப்படி மொத்தம் 4 முறை விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆணையத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜராகியுள்ளார். அவரிடம், ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு ஏன் அழைத்து செல்லவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.