ஆறாவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை, காப்பாற்றியது எது?

 

ஆறாவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை, காப்பாற்றியது எது?

கண்ணிமைக்கும் நேரத்தில் ஆறு மாடி உயரத்திலிருந்து கீழே விழுகிறது குழந்தை. ஐந்தாவது மாடி, நான்காவது மாடி, மூன்றாவது மாடி என ஒவ்வொரு மாடியாக விழவில்லை, ஒரே நொடியில் ஆறாவது மாடியிலிருந்து தரைக்கு வருகிறது குழந்தை.

சீனாவின் சாங்குவிங் மாகாணத்தில் உள்ள‌ ஆறு மாடி கட்டிட பால்கனியில் மூன்று வயது குழந்தை தொங்கிக்கொண்டிருக்கிறது. பால்கனியில் குழந்தை தூங்கிக்கொண்டிருக்கவில்லை, பால்கனியை ஒட்டியிருக்கும் க்ரில் கம்பிகளுக்கு வெளியே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. ஆறு மாடிகளுக்கு கீழே தரையில் இருந்து பார்த்தவர்களுக்கு குழந்தை அலறல் சத்தம் கேட்க, அண்ணாந்துப் பார்த்தால் குழந்தை தொங்கிக்கொண்டிருக்கிறது. சட்டென கூட்டம் கூடுகிறது கீழே. கூட்டத்தில் சமயோசிதமாக யோசித்த ஒருவர் உடனடியாக போர்வை ஒன்றை எடுத்துக்கொண்டு வருகிறார்.
Crowd Saves by with a blanket

போர்வையை கண்ட உடனிருந்தவர்கள் அதனை நன்றாக விரித்துப் பிடித்துக்கொள்கின்றனர். அவர்கள் தலைக்கு மேலே குழந்தை ஆறு மாடி உயரத்தில் இருந்து தொங்குகிறது. எந்த நேரமும் கீழே விழலாம். குழந்தை மேலே வைத்த கண்ணை யாரும் விலக்கவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் ஆறு மாடி உயரத்திலிருந்து கீழே விழுகிறது குழந்தை. ஐந்தாவது மாடி, நான்காவது மாடி, மூன்றாவது மாடி என ஒவ்வொரு மாடியாக விழவில்லை, ஒரே நொடியில் ஆறாவது மாடியிலிருந்து தரைக்கு வருகிறது குழந்தை. தரைக்கு வரும் வரைதான் அது குழந்தை. தரைக்கு வந்த நொடி, மிகச்சரியாக போர்வையில் விழ, ஒரு சிராய்ப்பு கூட இல்லாமல் குழந்தை தெய்வாதீனமாக சிரிக்கிறது. மொத்த காட்சியும் வீடியோவில். அப்புறமென்ன, வைரல்தான்!