ஆறாவது படம்…ஆறு எடிட்டர்கள்…ஆறு ஒளிப்பதிவாளர்கள்…வாட் எ நான்சென்ஸ் செண்டிமெண்ட் டைரக்டர் சார்?…

 

ஆறாவது படம்…ஆறு எடிட்டர்கள்…ஆறு ஒளிப்பதிவாளர்கள்…வாட் எ நான்சென்ஸ் செண்டிமெண்ட் டைரக்டர் சார்?…

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியாமல் குழம்பி வரும் தமிழ் சினிமாவில் இயக்குநர் சிம்பு தேவன் தனது ஆறாவது படத்துக்கு ஆறு எடிட்டர்கள், ஆறு ஒளிப்பதிவாளர்களைப் பணியில் அமர்த்தி அதற்கான காரணத்தை அறிவிக்காமல் கன்ஃபியூஸ் பண்ணியுள்ளார்.

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியாமல் குழம்பி வரும் தமிழ் சினிமாவில் இயக்குநர் சிம்பு தேவன் தனது ஆறாவது படத்துக்கு ஆறு எடிட்டர்கள், ஆறு ஒளிப்பதிவாளர்களைப் பணியில் அமர்த்தி அதற்கான காரணத்தை அறிவிக்காமல் கன்ஃபியூஸ் பண்ணியுள்ளார்.

’இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சிம்பு தேவன், அதைத்தொடர்ந்து ’அறை எண் 305-ல் கடவுள்’, ’இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்’, ’ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’, ’புலி’ என்று தொடர்ச்சியாக நான்கு ஃப்ளாப் படங்கள் கொடுத்தார்.

vadivelu

அத்தனை தோல்விப்படங்களையும் தாண்டி இயக்குநர் ஷங்கர் இன்னொரு வாய்ப்புக் கொடுக்க வடிவேலுவை மீண்டும் கதாநாயகனாகக்கொண்டு இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை சிம்பு தேவன் தொடங்கி படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தார். ஷங்கர் தயாரிப்பில் உருவாகிய அந்தப் படம் தற்போது பாதியிலேயே நின்றுள்ளது. தயாரிப்பு தரப்புக்கும் வடிவேலுவுக்கும் இடையே ஏற்பட்ட மனகசப்பு காரணமாக படம் அடுத்த கட்டத்துக்கு நகராமல் உள்ளது.

simbudevan

இந்த நிலையில் சத்தமில்லாமல் சிம்பு தேவன் ’கசட தபற’ என்ற புதிய படத்தை உருவாக்கியுள்ளார். தென்சென்னையை மையமாகக்கொண்டு உருவான இந்தப் படத்தை வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனியுடன் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.இந்த நிலையில் தற்போது வெளியான தகவலில், முதன் முறையாக ஆறு முன்னணி படத்தொகுப்பாளர்கள் இந்தப் படத்தில் பணியாற்றவுள்ளனர். கசட தபற என்ற ஆறு எழுத்திற்கேற்ப ஆறு படத்தொகுப்பாளர்கள். அவர்களின் விவரம்: ஆண்டனி, ராஜா முகமது, காசி விஸ்வநாதன், பிரவீன் கே.எல்., விவேக் ஹர்ஷன், ரூபன். மேலும் இன்று மாலை (மே 22) படத்தில் பணியாற்றிய ஆறு ஒளிப்பதிவாளர்களின் பெயர்களும் வெளியாகவுள்ளன.

 

Here goes our kasadatabara EDITOR CREW!! Thanks a lot for introducing them @sreekar_prasad sir!???????#kasadatabara @vp_offl @blacktktcompany @tridentartsoffl @mukasivishwa@editoranthony @cinemainmygenes@vivekharshan@AntonyLRuben https://t.co/d0rbe5ZI0L

— Chimbu Deven (@chimbu_deven) May 21, 2019

தமிழில் படத் தயாரிப்புகளின் எண்ணிக்கை அளவுக்கு மீறிப்போய்விட்டதால் வாரத்துக்கு சர்வசாதாரணமாக நான்கு முதல் ஆறு படங்கள் வரை ரிலீஸாகின்றன. அந்த ஆறு படங்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாக எதாவது தெரியவேண்டுமென்பதற்காக இப்படி ஆறு ஆறு வேறு வேறு டெக்னீஷியன்கள் என்று இறங்கிவிட்டார்கள் போலும்.