ஆர்.டி.ஐ. புதிய ஆணையராக சுதிர் பார்கவா பதவியேற்றார்

 

ஆர்.டி.ஐ. புதிய ஆணையராக சுதிர் பார்கவா பதவியேற்றார்

இந்தியாவின் புதிய தகவல் ஆணையராக சுதிர் பார்கவா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

புதுடெல்லி: இந்தியாவின் புதிய தகவல் ஆணையராக சுதிர் பார்கவா இன்று பதவியேற்றுக் கொண்டார். 

நாட்டின் தலைமை தகவல் ஆணையராக இருந்த ஆர்.கே.மாத்தூரின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய தலைமை ஆணையராக சுதிர் பார்கவா நியமனம் செய்யப்பட்டார். 

இவரின் நியமனத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியதையடுத்து, மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 

இந்நிலையில், நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையராக சுதிர் பார்கவாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

மேலும், ஓய்வுபெற்ற அதிகாரிகள் யஷ்வர்தன் குமார் சின்ஹா, வனஜா என் சர்னா, நீரஜ் குமார் குப்தா, முன்னாள் சட்ட செயலாளர் சுரேஷ் சந்திரா ஆகியோர் இதே நிகழ்ச்சியில் தகவல் ஆணையர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.