ஆர்ப்பாட்டம் பண்ண போறீங்களா அதை மட்டும் பண்ணுங்க……உ.பி.யை தொடர்ந்து கர்நாடகாவும் எச்சரிக்கை….

 

ஆர்ப்பாட்டம் பண்ண போறீங்களா அதை மட்டும் பண்ணுங்க……உ.பி.யை தொடர்ந்து கர்நாடகாவும் எச்சரிக்கை….

ஆர்ப்பாட்டத்தின் போது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் உத்தர பிரதேசம் மாதிரி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என கர்நாடகா வருவாய் துறை அமைச்சர் ஆர். அசோகா எச்சரிக்கை விடுத்தார்.

உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. அந்த மாநிலத்தில் இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒரு கட்டத்தில் பெரும் கலவரமாக வெடித்தது. கார்களுக்கு தீ வைப்பு, பொது சொத்துக்களை சேதப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து கலவரகாரர்களுக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடும் எச்சரிக்கை விடுத்தார். 

யோகி ஆதித்யநாத்

எதிர்ப்பு என்ற பெயரில் நீங்கள் வன்முறையில் ஈடுபட முடியாது. இது போன்ற சம்பவங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது சொத்துக்களை சேதம் விளைவிக்கும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்து, ஏலம் விட்டு இழப்புகள் ஈடு செய்யப்படும் என யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை செய்தார். மேலும், பொது சொத்துக்களை சேதம் ஏற்படுத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் சிலரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வந்தது.

கர்நாடக அமைச்சர் ஆர். அசோகா

தற்போது உத்தர பிரதேசத்தை தொடர்ந்து கர்நாடகாவும், பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்களிடம் இழப்பீடு வசூலிக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளது. இது தொடர்பாக கர்நாடகா வருவாய் துறை அமைச்சர் ஆர். அசோகா கூறுகையில், உத்தரப் பிரதேசத்தை பின்பற்றி, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்யும். மாநிலத்தின் சட்டத்துக்கு அனைவரும் கீழ்படிய வேண்டும். அரசாங்கத்துக்கு அத்தகைய வாய்ப்பை வழங்கக்கூடாது என தெரிவித்தார்.