ஆர்ப்பரித்த காளி ஊர்வலம் … குலசை தசரா விழா! 

ஆர்ப்பரித்த காளி ஊர்வலம் … குலசை தசரா விழா! 

மைசூரில் பேர் போன தசரா கொண்டாட்டங்களைப் போலவே தமிழகத்திலும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவும் உலகப் புகழ் பெற்றது. குலசேகரப்பட்டினத்தில் இருக்கும் முத்தாரம்மன் கோயிலுக்கு வருடா வருடம் தசரா நாட்களில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து குவிகிறார்கள். இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்தபடியாக, தசரா திருவிழாவானது மிகச்சிறப்பாக குலசையில் தான் கொண்டாடப்பட்டு வருகின்றது. வேறு எந்த மாநிலத்திலும் இத்தனை சிறப்பாக கொண்டாடப்படுவது கிடையாது.

kaali

இந்த ஆலயத்தில்  பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றக் கோரியும், நிறைவேறிய வேண்டுதல்களுக்காக 11 அடிகளில் வேல் குத்தியும், 21 தீச்சட்டிகளைச் சுமந்தும், பல்வேறு வேடங்களைப் பூண்டு திருநங்கைகளும் என பலரும் தொடர்ந்து 41 நாட்கள் விரதமிருந்தும் குலசை முத்தாரம்மன் கோயிலுக்குச் செல்வது, காலங்காலமாகப் பக்தர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த வருடம் தசரா பண்டிகையையொட்டி காளி ஊர்வலம் நடைப்பெற்றது. தசரா குழுவினர், பாளை சாலையிலுள்ள வேம்படி இசக்கியம்மன் ஆலயத்திற்கு, வேடங்களை அணிந்து வந்து அங்கிருந்து அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு அம்பாளின் அருள் ஆசிபெற்றுச் சென்றனர். காண்பவர்களுக்கு பக்தி பரவசத்தை ஏற்படுத்தும் விதமாக கொண்டாட்டங்கள் இருந்தது.