ஆர்டர் பண்ணுனது பீட்சா தான்…ஆனா வந்ததோ போலீஸ்! ஏன் தெரியுமா?.

 

ஆர்டர் பண்ணுனது பீட்சா தான்…ஆனா வந்ததோ போலீஸ்! ஏன் தெரியுமா?.

சம்பவம் நடந்தது அமெரிக்காவில் இருக்கும் ஓஹியோ நகரில்.இது ஓரேகான் என்கிற மாநிலத்தில் இருக்கிறது.அமெரிக்காவில் 911 என்கிற எண்ணைத் தொடர்பு கொண்டால் 5.6 நிமிடத்தில் இருந்து 10 நிமிடத்துக்குள் போலீஸ் வந்துவிடும்.

சம்பவம் நடந்தது அமெரிக்காவில் இருக்கும் ஓஹியோ நகரில்.இது ஓரேகான் என்கிற மாநிலத்தில் இருக்கிறது.அமெரிக்காவில் 911 என்கிற எண்ணைத் தொடர்பு கொண்டால் 5.6 நிமிடத்தில் இருந்து 10 நிமிடத்துக்குள் போலீஸ் வந்துவிடும்.

அன்று ஓஹியோ போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு அப்படி ஒரு கால் வந்தபோது டூட்டியில் இருந்த அதிகாரி ( டெஸ்பாட்சர் ) டெனிசெக் ஃபோனை எடுத்த போது எதிர் முனையில் பேசிய பெண்,’ஒரு பெப்ரோனி பீட்சா அவசரமா வேணும்’ என்றதும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை.911 க்கு போன் பண்ணியா பீட்சா  கேக்கறது’ என்றார் டெனிசெக்.’உங்களுக்கு புரியலை’ என்றது மறுமுனை,
அந்த 20 விநாடிகளில் அவருக்கு புரிந்துவிட்டது.

police

‘இதோ கிளம்பிட்டோம்’ என்று போனை வைத்தார்.போலீஸ் அந்த டெலிஃபோன் இருக்கும் வீட்டுக்கு வந்த போது சைமன் லோபெஸ் என்கிற ஆசாமி ,பீட்சா கேட்ட பெண்ணின் தாயை அடித்து மிரட்டிக்கொண்டு இருந்தான். அவனை அள்ளி வந்த போலீஸ் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது.

image

இந்தச் செய்தி வெளி வந்ததும் அது அமெரிக்கா முழுவதும் பேசு பொருளாகிவிட்டது.வீட்டுக்குள் நடக்கும் வன்முறை சம்பவங்களின் போது வெளிப்படையாக 911 எண்ணை அழைத்து பேச முடியாது.அதனால்,தாக்குதல் இன்னும் மோசமாகலாம்.போன் செய்த நபரும் தாக்கப்படும் ஆபத்து இருக்கிறது. ஆகவே இப்படி ஒரு கோட் இருப்பது சரிதான் என்று அமெரிக்காவின் பிரபல நாளேடான வாஷிங்டன் போஸ்ட் தலையங்கமே எழுதியது.

pizza

பெரும்பாலான அமெரிக்க மாநிலங்களில் 911 க்கு எஸ்.எம்.எஸ் செய்தாலே போலீஸ் வரும்.ஆனால் ஓரேகான் மாநிலத்தில் அந்த வசதி இல்லை. ஆனாலும் தன் தாய் தாக்கப்படுவதைப் பார்த்த அந்த பெண் புத்திசாலித்தனமாக பீட்சா ஆர்டர் செய்வது போல நடித்ததும் அதை அந்த டெஸ்பாட்சர் டெனிச்செக் புரிந்து கொண்டு உடனே செயல் பட்டதும் ஆச்சர்யம்தான்.ஓஹியோ மாநில காவல்துறை தலைவர் மைக்கேல் ரெவேரி இது குறித்து கருத்துத் தெரிவிக்கும்போது,தனது துறையில் இருக்கும் காவலரின் செயல் தன்னை பெருமைப்பட வைத்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.