ஆர்ஜே பாலாஜி ‘எல்.கே.ஜி’ பட ரன்டைம் நேரம் குறித்த தகவல்!

 

ஆர்ஜே பாலாஜி ‘எல்.கே.ஜி’ பட ரன்டைம் நேரம் குறித்த தகவல்!

நடிகர் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள எல்.கே.ஜி பட ரன்டைம்  நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

சென்னை: நடிகர் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள எல்.கே.ஜி பட ரன்டைம்  நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘எல்.கே.ஜி. பிரபு இயக்கியுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதையை ஆர்.ஜே.பாலாஜி எழுதியுள்ளார். ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரசியலுக்கு வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி’ என்று இப்படத்தின் விளம்பரம் தொடங்கப்பட்டது. மேலும், படத்தின் போஸ்டர்கள், ட்ரெய்லர் என அனைத்துமே சமீபத்திய அரசியல் நிகழ்வுகளைக் கிண்டல் செய்யும் விதத்தில் இருந்ததால் பல எதிர்பார்ப்பு  எழுந்துள்ளன. அதையடுத்து வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் மட்டுமே அதிகாலை காட்சிகள் திரையிடப்படும். ஆனால், ‘எல்.கே.ஜி’ படத்துக்கு மக்கள் நிலையில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளதால்  சென்னையிலுள்ள ரோகிணி திரையிரங்கம் காலை 5 மணி காட்சியை ஒதுக்கியுள்ளது.

Lkg run time

இந்நிலையில் இந்த படம் ஏற்கனவே சென்சாரில் ‘யூ’ சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ”எல்.கே.ஜி’ திரைப்படம் 124 நிமிடங்கள் ரன்னிங் டைமை பெற்றுள்ளது அதாவது 2 மணி நேரம் 4 நிமிடங்கள் மட்டுமே இந்த படத்தின் ரன்னிங் டைம் ஆகும்