ஆர்ஜே பாலாஜியின் ‘LKG’ வெளியாகும் தேதி அறிவிப்பு

 

ஆர்ஜே பாலாஜியின் ‘LKG’ வெளியாகும் தேதி அறிவிப்பு

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள LKG திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள LKG திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் பிரபு இயக்கியுள்ள ‘எல்.கே.ஜி’ படத்திற்கு நடிகர் ஆர்.ஜே.பாலாஜி திரைக்கதை எழுதியுள்ளார். சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆர்ஜே பாலாஜி மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்கள். நாஞ்சில் சம்பத் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி வெளியாகும் என டிவிட்டர் இந்தியா பக்கத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.