ஆரோக்கியம் காக்கும் எண்ணெய் குளியல் | லைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்

 

ஆரோக்கியம் காக்கும் எண்ணெய் குளியல் | லைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்

வாரத்தில் இரண்டு நாட்கள் கண்டிப்பாக எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்க வேண்டும். வளரும் வயதில், சோம்பேறித்தனத்தால் எண்ணெய் குளியலைத் தவிர்த்துவிட்டு, பின் முடி கொட்டுகிறது என்று புலம்ப ஆரம்பிக்கிறோம்.

வாரத்தில் இரண்டு நாட்கள் கண்டிப்பாக எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்க வேண்டும். வளரும் வயதில், சோம்பேறித்தனத்தால் எண்ணெய் குளியலைத் தவிர்த்துவிட்டு, பின் முடி கொட்டுகிறது என்று புலம்ப ஆரம்பிக்கிறோம்.
ஏன் எண்ணெய் குளியல் அவசியம்?

oil bath

எண்ணெய் குளியல் நம் பாரம்பரிய குளியல் முறை. நம் உடலுக்கு எண்ணெய் சத்து மிகவும் அவசியமானது. முடி, சருமம் ஆகியவை இயல்பிலேயே மிதமான கொழுப்பு தன்மையுடையவை. இவை இரண்டுமே சருமத்தையும் கூந்தலையும் பாதுகாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. பொதுவாகவே, நம் உடலின் வெப்பத்தன்மை அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்கிறது. 
காற்றில் கலந்திருக்கும் டீசல் புகைகளில் இருக்கும் மாசு காரணமாக, தூசுக்கள் நம் தோலின் மீது படிந்துவிடும். இந்தத் தூசு எல்லாமே, தண்ணீரில் கரைவது இல்லை. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம், சருமம் பொலிவுடன் இருக்கும்.
எப்பொழுது குளிக்க வேண்டும்?
எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்வதானால், காலை 6 மணிக்குள் குளித்து விட வேண்டும். அது தான் சரியான நேரம். தீபாவளியைத் தவிர்த்து பிற நாட்களில் சூரிய உதயத்திற்கு முன்னால் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. 
வாரம் இரண்டுமுறை எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளிலும், ஆண்கள் புதன், சனிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளலாம். கிழமை மட்டும் பார்த்தால் போதாது. சில நாட்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி, துவாதசி, விரதநாட்கள், ஞாயிறு, வியாழன், கார்த்திகை, பிதுர்தினங்கள் ஆகிய நாட்களில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக்கூடாது.
எப்படிக் குளிக்க வேண்டும்?

oil bath

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது இதமான வெந்நீரில் தான் குளிக்க வேண்டும். சீயக்காய் அல்லது நலங்குமாவைப் பயன்படுத்தலாம். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பொழுது, ஷாம்பூ பயன்படுத்தி தலைமுடியை அலசாதீர்கள். எண்ணெய் குளியல் எடுத்துக் கொண்ட அன்று, எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணைக் குளியல் செய்த அன்று பாலுறவு கூடாது. பகலுறக்கம் கூடாது. கடுமையான வெய்யிலில் வேலை செய்யகூடாது. குளிர்ந்த உணவுகள் கண்டிப்பாக கூடாது.
அறிவியல் என்ன சொல்கிறது?
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் நம்மைச் சுற்றிலும் ஒரு புகை வளையம் உருவாகின்றது என்பதை ஆய்வின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவ்வளையம் இருப்பதால் கோள்களிலிருந்து வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழைய முடியாமல் போகின்றது.
எண்ணெய்க்குளியல் பலன்கள்
உடற்சூடு சீராகும், அழகுகூடும், சருமம் மென்மையாகும். ஐம்புலன்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும். தலை முடி நன்கு வளரும், நல்ல குரல் வளம் கிடைக்கும், எலும்புகள் பலப்படும். வேனல் கட்டிகள், வியர்க்குரு போன்றவை எட்டிப் பார்க்காது. உடல் சோர்வு, உடல் வலி நீங்கும்.

oil bath

 நல்ல உறக்கம் வரும். ஆயுள் விருத்தியடையும். உடலில் பித்தம் அதிகமாவதால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம், மூலச்சூட்டினால் உண்டாகும் உடல் உபாதைகள், மன நிலையில் சமநிலையின்மை போன்றவை சீராகும்.