ஆரோக்கியமான சிறுதானிய சத்து உருண்டை செய்வது எப்படி?

 

ஆரோக்கியமான சிறுதானிய சத்து உருண்டை செய்வது எப்படி?

சத்து நிறைந்த சிறுதானிய சத்து உருண்டை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்

சத்து நிறைந்த சிறுதானிய சத்து உருண்டை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

நாட்டுச்சர்க்கரை – 2 கப்

தேங்காய் துருவல் – அரை கப்

கோதுமை – கால் கப்

கம்பு – கால் கப்

கொள்ளு – கால் கப்

பச்சைப் பயறு – கால் கப்

காராமணி – கால் கப்

பொரிக்கடலை – கால் கப்

எள் – 2 தேக்கரண்டி

நெய் – தேவையான அளவு

செய்முறை:

நாட்டுச்சர்க்கரையை நன்கு பொடித்து எடுத்து கொள்ள வேண்டும்.

அனைத்து தானியங்களையும் வெறும் வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து வைத்து கொள்ள வேண்டும்.

அரைத்த மாவுடன் பொரிக்கடலை, பொடித்த நாட்டுச்சர்க்கரை, தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலந்து நெய்யை உருக்கி மாவில் ஊற்ற வேண்டும்.

சற்று சூடாக இருக்கும் போதே மாவை உருண்டைகளாக பிடித்து பரிமாறலாம்.

சுவையான சிறுதானிய இனிப்பு உருண்டை தயார்