ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் கறிவேப்பிலைக் குழம்பு

 

ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் கறிவேப்பிலைக் குழம்பு

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை –அரை கப்
சின்னவெங்காயம்-20
மிளகு -1தேக்கரண்டி
சீரகம் -1தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு-1மேஜைக்கரண்டி
காய்ந்த மிளகாய்-4

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை –அரை கப்
சின்னவெங்காயம்-20
மிளகு -1தேக்கரண்டி
சீரகம் -1தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு-1மேஜைக்கரண்டி
காய்ந்த மிளகாய்-4
பூண்டு-2பல்
இஞ்சி-சிறுதுண்டு
பெருங்காயம் –சிறிது
கடுகு-தாளிக்க
நல்லெண்ணெய்-1மேஜைக்கரண்டி
புளி-எலுமிச்சை அளவு
உப்பு-தேவைக்கு

karuvepillai kulambhu

செய்முறை

சின்னவெங்காயத்தை உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு ,மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

வதக்கிய பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு ஊற வைத்த புளியை சேர்த்து நைசாக விழுது போல் அரைக்கவும். அதே பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கட்டி பெருஙகாயம், சேர்த்து தாளிக்கவும். தாளித்தவற்றுடன் பொடியாக நறுக்கின வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து வதக்கி விடவும்.

karuvepillai kulambhu

வதக்கிய பின்னர் ஊறவைத்த புளி தண்ணீர் மற்றும் தண்ணீர் 2 கப் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். குழம்பில் எண்ணெய் மேலே மிதக்கும் வரை சுண்டியதும் மல்லித்தழி சேர்த்து இறக்க, சுவையான கறிவேப்பிலை குழம்பு தயார்.