’ஆரி – பாலா – அனிதா’ உருவாகும் புதிய கூட்டணி – பிக்பாஸ் 64-ம் நாள்

 

’ஆரி – பாலா – அனிதா’ உருவாகும் புதிய கூட்டணி – பிக்பாஸ் 64-ம் நாள்

புதிய கேப்டன் தேர்ந்தெடுக்கும் நாள் மற்றும் நாமினேஷனில் யார் யார் இருக்கப்போகிறார்கள் என்பதையும் முடிவு செய்யும்நாள். அதனால், திங்கட்கிழமை எப்பிசோட் சுவாரஸ்யமாகவே இருக்கும் என எதிர்பார்த்ததுதான். அந்த வகையில் நேற்று ஏமாற்றமில்லை. குருப்பிஸம் பற்றிய உரையாடலில் உருவானது புதிய அணிகள். எப்படி என்பதைக் கட்டுரையில் பார்ப்போம்.

63-ம் நாள் இரவு

ஷனம் வெளியேறியதும், அவரது உடைகள், பொருட்களை அனுப்புவதற்கு எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது ‘ஒரு பேப்பரில் அனிதா ஏதோ எழுதி ஷனம்க்கு அனுப்பும் பைக்குள் வைத்தார்.

இன்னொரு பக்கம் ஷிவானி அழுதுகொண்டு உட்கார்ந்திருந்தார். அவருக்கு கடைசி மூவரில் தானும் ஒருவர் எனும் அளவுக்குத்தான் வாக்குகள் கிடைத்திருக்கின்றன என்பது கலக்கமாக இருந்திருக்கிறது. ஏனெனில், தன்னைப் பற்றி மிகை கற்பனையில் இருந்தார். ஆடியன்ஸ் கேட்ட கேள்வியும், வாக்கு எண்ணிக்கையில் கடைசியில் என்று வந்தததும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அவரைச் சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார் பாலா.

64-ம் நாள்

’ஆரி – பாலா – அனிதா’ உருவாகும் புதிய கூட்டணி – பிக்பாஸ் 64-ம் நாள்

‘அல்லு சில்லு’ என பாட்டைத் தெறிக்க விட்டார் பிக்கியின் தம்பி. வழக்கமாக முதல் ஆளாக ஆடும் அனிதா, ஷனம் வெளியேறிய துக்கத்தில் படுக்கையை விட்டே எழுந்திருக்க வில்லை. மற்றவர்கள் ஆடிக் களித்தார்கள்.

“இந்த லோகத்துல நல்ல மனுஷாளே இல்லையா’ என்ற ரேஞ்சுக்கு ஆரி – பாலா – அனிதா பேசிட்டு இருந்தார்கள். அர்ச்சனா குரூப்ல இருக்கிற ஆட்கள் அப்படியே இருக்காங்க… தனித்தனியா விளையாடுறவங்க வெளியே போயிடுறாங்க என்பதுதான் இவர்களின் குற்றச்சாட்டு.

நாமினேஷுக்கு வேண்டுமானால் அர்ச்சனா அண்ட் கோ ஒருவரை அனுப்பலாம். ஆனால், வெளியேற்ற செய்வது ஆடியன்ஸ்தானே (அப்படித்தான் நம்பறோம்). சென்ற வாரமே, அர்ச்சனா டீம்லேயிருந்து, நிஷா, ஆஜித் இருந்தார்களே… அதற்கு முந்தைய வாரம், சோம், நிஷா, கேபி என எல்லோரும் இருந்தார்களே… ஆடியன்ஸ் வாக்குகள் அதிகம் கிடைத்து காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

’ஆரி – பாலா – அனிதா’ உருவாகும் புதிய கூட்டணி – பிக்பாஸ் 64-ம் நாள்

இவர்களோடு ஷிவானியும் சேர்ந்துகொண்டார். அப்படியும் ஒண்ணும் பயனில்லை. அவர் சும்மாதானே இருக்கப்போகிறார். ‘இப்படியே இவர்கள் விளையாண்டால் ஃபைனலுக்கு அவங்க ஐந்து பேரும்தான் போவாங்க. அர்ச்சனாவுக்கு பட்டம் வெல்லனும்னு ஆசை இல்லை. ரியோ அல்லது நிஷா வெல்லனும்னு விளையாடுறாங்க’னு ஆரி புலம்பி தீர்த்தார். “ஓ! இதை இப்பதான் கண்டுபிடிக்கிறீங்களா! நான் ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே கரடியா கத்துனேனே’னு பாலா அணத்திட்டு இருந்தார்.

இப்படி ஒரு கூட்டணி உருவாகியிருக்கு. எல்லோரையும் ஒன்றாக இணைத்தது என்னன்னா… ரியோ மீது கடுப்பு அல்லது ரியோ ஃபைனலுக்குப் போயிடுவார்ன்னு பயம்னுகூட சொல்லலாம்.

இடைவெளிக்குப் பிறகு, ‘டேய், இவர் மிஸ்டர் இந்தியாவாம்டா… நாட்டுலேயே இவர்தான் மிஸ்டராண்டா’ என ஆஜித்திடம் பாலாவை ஓட்டிட்டு இருந்தார் ரம்யா. அங்கே வந்த ஷிவானி, ‘அப்படிச் சொல்லாதீங்க.. சொல்லாதீங்கன்னு கொஞ்சிட்டு இருந்தார். ’நாட்டுல இல்ல.. உலகத்திலேயே’னு ஷிவானி திருத்த, ‘உன் மனசுல இருக்கிறதெல்லாம் நான் சொல்ல முடியாதுல’னு ரம்யா ரூட்டை மாற்ற, ‘இங்கிருந்தா சரியா வராது’னு வண்டியைக் கிளப்பி எஸ்கேப்பானார் பாலா.

’ஆரி – பாலா – அனிதா’ உருவாகும் புதிய கூட்டணி – பிக்பாஸ் 64-ம் நாள்

ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கலந்துகொண்ட கேப்டன் டாஸ்க் நடந்தது. உருப்படியான டாஸ்க். எதிரில் இருக்கும் படத்தை நன்கு உற்றுப்பார்க்க வேண்டும். அதிலிருந்து கேட்கப்படும் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். ஜோடி ஜோடியாகப் போய், ஒருவர் தோற்று தோற்று இறுதியாக நிஷா – அனிதா ஜோடி வந்தது. பலரும் எதிர்பார்த்ததுபோல அனிதா வென்று இந்த சீசனின் முதல் கேப்டனாகப் பதவியேற்றுக்கொண்டார்.

அர்ச்சனாவைப் பற்றி அப்படிக் கழுவி ஊத்திவிட்டு, ஜெயித்தவுடன் ஓடிச்சென்று தாவி அவர் மடிமீது எப்படி உட்கார முடியும் என்பது மில்லியன் டாலர் கேள்வி. பிக்பாஸ் கேம் பற்றிதான் பேசிக்கொள்கிறார்கள் என்றாலுமே அது தனி மனிதர்கள் பற்றிய புகார்தானே… அப்படியே ப்ளேட்டைத் திருப்பி போடுவதுபோல ஓரிரு நிமிடங்கள் மாறிக்கொள்கிறார்கள்.

டீம் பிரிக்கும் நேரத்தில் ஆரி – சோம் இருவருக்குள் ஒரு சின்ன வாக்குவாதம். முதல்நாளே இப்படியா… என முகத்தில் ஜெர்க் காட்டினார் அனிதா. ஆனால், அனிதாவுக்கு வாதாட ஆரி – பாலா என இரண்டு பெரிய வக்கீல்களை அனிதா ரெடி பண்ணியிருப்பதால் தப்பித்துக்கொள்ளலாம்.

’ஆரி – பாலா – அனிதா’ உருவாகும் புதிய கூட்டணி – பிக்பாஸ் 64-ம் நாள்

ஆரியைக் கூப்பிட்டார் பிக்பாஸ். சென்ற வாரம் நடந்த 60 நாள் என்ன செஞ்சீங்க டாஸ்க்கை கண்டினியூ பண்றாரோன்னு நினைச்சோம். ஆனால், இது வேற ஆப்பு. ஆரி பட்டியலில் முதல் இடத்தில் வந்ததால் எவிக்‌ஷனலிருந்து காப்பாற்றப்பட்டாராம். அதற்குப் பதில் யாரைவாது நாமினேட் செய்ங்க என்றார் பிக்கி. அவர் ஜித்தன் ரமேஷை நாமினேட் பண்ணினார்.

அடுத்து பாலாவைக் கூப்பிட்டு நீங்க இரண்டாம் இடம், அதனால் எவிக்‌ஷனலிருந்து தப்பிக்கிறீங்க… வேற யாரையாவது நாமினேட் பண்ணுங்க என்றார் பிக்கி. அவர் கேபியைத் தேர்வு செய்தார்.

அடுத்து, அர்ச்சனாவை அழைத்து ஒரு காரணம் சொன்னார் பிக்கி. பூப்போட்ட புடவை கட்டியிருந்தீங்க அதனால எவிக்‌ஷனலிருந்து தப்பிக்கிறீங்க… வேற ஒருத்தரைச் சொல்லுங்கனு சொன்னதும் வேற வழியில்லாமல் தம் கண்மணிகளில் ஒருவரான சோம்ஸை தேர்வு செய்தார்.

உள்ளே போய்ட்டு வந்தவர்கள் டாக்டர் செக்கப் என்பதை அப்படியே மெய்ண்டைன் பண்ணிட்டு இருந்தாங்க. ஏற்கெனவே உள்ளே போய்ட்டு வந்தவங்க, போன வார டாஸ்க் என நினைச்சு ஜாலியா கலாய்ச்சிட்டு இருந்தாங்க.

’ஆரி – பாலா – அனிதா’ உருவாகும் புதிய கூட்டணி – பிக்பாஸ் 64-ம் நாள்

கடைசியாக எல்லோரையும் சோபாவில் உட்காரச் சொல்ல, ‘என்னை ஏன் ஆபிஸ் ரூம்க்கு கூப்பிடல’னு ரியோ அடம்பிடிச்சார். பிக்கி ஆனந்தம் மம்மூட்டி வாய்ல ‘வேணாம்டா… நீ தாங்க மாட்டே’னு சொல்லியிருப்பார்.

கேப்டன் என்பதால் அனிதா எவிக்‌ஷனலிருந்து விடுவிக்கப்பட்டார். புதிதாகத் தேர்வான சோம், கேபி, ரமேஷ் ஆகியரோடு ரம்யா, நிஷா, ஷிவானி ஆகியோரும் நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்தார்கள்.

இப்படி ஆளை மாற்றம் செய்தால், அந்த கால் செண்டர் டாஸ்க் எதுக்கு பிக்கி. ஏற்கெனவே டாஸ்க்கை எல்லாம் மொக்கையா பண்றாங்க.. இந்த லட்சணத்தில டாஸ்க் வென்றாலும் ஒரு பயனும் இல்லன்னு சொல்ற மாதிரி விதியை மாற்றம் செஞ்சா எப்படி?

ஆரி முதல் இடத்தில் வந்தாலும்கூட, கால் செண்டர் டாஸ்க்கை ஒழுங்கா ஆடலன்னுதானே எவிக்‌ஷனுக்கு நாமினேட் பண்ணப்பட்டார். பாலா ஒழுங்கா ஆடலன்னுதானே நாமினேட் செய்யப்பட்டார். அப்ப அந்த டாஸ்க்கெல்லாம் சும்மா டைம்பாஸ்க்காக வைக்கப்பட்டதா… உங்க டாஸ்க்குக்கு உள்ள மரியாதையை நீங்களே கெடுத்துக்கொள்றீங்க பிக்பாஸ். உங்க முடிவைப் பார்த்து பேசாமா பருத்தி மூட்டை கொடவுனிலேயே இருந்திருக்கலாம்னு சோஷியல் மீடியாவில் நக்கலடிக்கிறாங்க.

’ஆரி – பாலா – அனிதா’ உருவாகும் புதிய கூட்டணி – பிக்பாஸ் 64-ம் நாள்

பாலா – ஆரியும் உட்கார்ந்து தீவிரமாகப் பேசிட்டு இருந்தாங்க. டைட்டிலை நீயே வெச்சுகோ…னு வாரி வழங்கினார் ஆரி. ‘ஷிவானிக்காக விளையாட்டுல விட்டுக்கொடுத்திடாதேன்னு ஆரி சூடேத்த, ‘அவ இந்த வாரம் போய்டுவா’னு டேக் இட் ஈஸியாக சொல்லி நகர்ந்தார் பாலா.