ஆரியுடன் காதலில் விழுந்த பிக் பாஸ் ஐஸ்வர்யா!
பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் ஆரி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் இன்று தொடங்கியது.
சென்னை: பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் ஆரி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் இன்று தொடங்கியது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா தத்தா, தனது மோசமான நடவடிக்கைகளால் மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும், அவருக்கென ரசிகர்களும், ஆர்மிகளும் உருவாகின. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரன்னரான ஐஸ்வர்யா, தனது முதல் படமாக காதல் படம் ஒன்றை தேர்வு செய்துள்ளார்.
நடிகர் ஆரி கதாநாயகனாக நடிக்கும் இந்த படம் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.
Love Match#AARI Vs #aishwaryadutta6 newfilmshooting started.Apure love story to experience from@Aariactor n@Aishwaryadutta6dir #SSRajaMithranproducers #ERAnandan#CreativeTeamz #BDharmarajan#GlowstarCreations Music@AGMahesh@srkarthik07 #LoveVsLove #AariVsAishwarya @johnsoncinepro pic.twitter.com/bYVqweUlPJ
— PRO Winsun (@Winsun_PRO) December 3, 2018
கிரியேட்டிவ் டீம்ஸ், க்ளோஸ்டார் கிரியேஷன்ஸ் என இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ’அய்யனார்’ பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமித்ரன் இயக்குகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த ‘96’ திரைப்பட பாணியில், முன்னாள் காதலர்கள் சந்திக்கும் போது ஏற்படும் பிரச்னைகளை மையமாக கொண்டது தான் இப்படம் என கூறப்படுகிறது.
இது குறித்து படக்குழுவிடம் இருந்து கிடைத்த தகவலின் படி, காதலுக்கு ஜாதி, மதம், அந்தஸ்து என ஏகபட்ட தடைகள் இருந்த காலங்கள் மலையேறி தற்போது காதலுக்கு காதலே எமனாக வந்துவிடும் நிலை உருவாகியுள்ளது. இதை பிரதிபளிக்கும் வகையில் தான் இந்த படம் உருவாகப்போவதாக கூறப்படுகிறது.
My next film with Ayyanar fame Dir raja Mithran dop Annadurai fame dilraj music mahesh Love Match AARI VS @aishwaryadutta6
60s – Love Vs Religion
80s – Love Vs Caste
Y2K – Love Vs Status2019- LOVE Vs LOVE
This film is ur❤️story not ours*
TITLE COMING soon @johnsoncinepro pic.twitter.com/XVXwDqsUXs— Aari (@Aariactor) December 2, 2018
இப்படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து 40 நாட்களுக்கு சென்னையிலும், பின்னர் 2 பாடல் காட்சிகள் வெளிநாட்டிலும் படமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.