ஆரவாரமாக காத்திருந்த மக்களுக்காக ‘பிகில்’ படத்தின் ரிலீஸ் டேட் இதோ…

 

ஆரவாரமாக காத்திருந்த மக்களுக்காக ‘பிகில்’ படத்தின் ரிலீஸ் டேட் இதோ…

வலோடு காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கும் நெட்டிசன்களுக்கும் பிகில் படத்தின் ரிலீஸ் டேட் இதோ.

நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Bigil

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக இப்படத்துக்கு யு/ஏ  சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.  அதன்படி படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 59 நிமிடங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.  

Bigil

பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகுமா அல்லது எப்போது வெளியாகும் என்று ஆவலோடு காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கும் நெட்டிசன்களுக்கும் பிகில் படத்தின் ரிலீஸ் டேட் இதோ. இன்று காலை அர்ச்சனா கல்பாத்தி பிகில் படம் எப்போது வெளியாகும் தேதி மாலை அறிவிக்கப்படும் என்று கூறிய படி அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகும் என்று கல்பாத்தி எஸ். அகோரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.