ஆரம்பமானது அத்திவரதர் திருவிழா; விழாக்கோலம் பூண்ட காஞ்சிபுரம்!

 

ஆரம்பமானது அத்திவரதர் திருவிழா; விழாக்கோலம் பூண்ட காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பின் அத்தி வரதர் வருகையால் காஞ்சிபுரம் விழா கோலம் பூண்டுள்ளது. 

 
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பின் அத்தி வரதர் வருகையால் காஞ்சிபுரம் விழா கோலம் பூண்டுள்ளது. 

athivaradhar

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீருக்குள் இருக்கும் அத்தி வரதரை  வெளியே எடுத்து, ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வைத்துவிடுவது வழக்கம். அதன்படி வெளியில் எடுக்கப்பட்ட இந்த அத்தி வரதரை ஆயிரக்கணக்கான மக்கள் வழிபட்டு மகிழ்ச்சியடைவர். 

athivaradhar

இந்நிலையில் அத்தி வரதர்  திருவிழா  இன்று கோலாகலமாகத் தொடங்கியது.  அதிகாலை 5 மணிக்கு அத்தி வரதருக்குச் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றதுடன்,   இட்லி, வெண்பொங்கல், சக்கரை பொங்கல், லட்டு, ஜிலேபி போன்றவை  நெய்வைத்யமாக  படைக்கப்பட்டது. இதன்பின்னர் காலை 6 மணி அளவில், அத்தி வரதரைத் தரிசிக்கப் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.  அப்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  சிறப்பு வழிபாடு நடத்தினார்.  அத்தி வரதரை  காண மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

athivaradhar

48 நாட்களுக்குக் காலை 6 மணி தொடங்கி நண்பகல் 12 மணி வரையிலும், பின்னர் பிற்பகல் 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும்  அத்தி வரதர் காட்சி அளிக்க உள்ளார். 20 நாட்கள் சயன கோலத்திலும், 28 நாட்கள் நின்ற கோலத்திலும் அத்தி வரதர் காட்சியளிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது