ஆரத்தி எடுப்பவர்களுக்கு பணத்தை வாரி இறைக்கும் கனிமொழி, வைரலாகும் வீடியோ – அதிமுக புகார்

 

ஆரத்தி எடுப்பவர்களுக்கு பணத்தை வாரி இறைக்கும் கனிமொழி, வைரலாகும் வீடியோ  – அதிமுக புகார்

தேர்தல் பிரச்சாரத்தின் போது, தன்னை ஆரத்தி எடுக்குப்பவர்களுக்கு கனிமொழி பணத்தை வாரி இரைப்பதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, தன்னை ஆரத்தி எடுக்குப்பவர்களுக்கு கனிமொழி பணத்தை வாரி இரைப்பதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் 

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுதாக்கல்கள் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக அமலில் இருக்கும் நிலையில், ஆசிரியரிடம் மாணவர்களை போட்டுக் குடுப்பது போல, ஒரு கட்சியினர் செய்யும் தவறுகளை மற்ற கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் போட்டுக் கொடுத்து வருகின்றனர்.

கனிமொழி

கனிமொழி பணம் கொடுக்கும் வீடியோ 

இந்நிலையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளரான கனிமொழியும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனும் தேர்தல் பிரச்சாரத்தின் போது தங்களை ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணத்தை வாரி கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கனிமொழி

அதிமுக புகார் 

இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் அதிமுக சார்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில், திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் அளிக்கிறார் எனவும், இது விதிமுறைகளுக்கு எதிரானது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்ட கனிமொழியின் நாடாளுமன்ற வேட்புமனுவை நிராகரிக்க அந்த மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க 

தமிழிசை சௌந்தரராஜனின் வேட்புமனு பரிசீலனை ஒத்தி வைப்பு – என்ன காரணம் தெரியுமா ?

கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் கிடைத்ததன் பின்னணி? தில்லியில் நடந்தது என்ன!