ஆயுளை அதிகரிக்கும் சனிக்கிழமை விரதம்

 

ஆயுளை அதிகரிக்கும் சனிக்கிழமை விரதம்

பெருமாளின் அனுக்கிரகம் கிடைப்பதற்கு சனிக்கிழமை விரதமே உகந்தது. 

 சனிக்கிழமை எப்பொழுதும்  நம்மை காக்கும் கடவுளான பெருமாளுக்கு உகந்த நாள். அதனால் தான் ஆஞ்சநேயரையும் சனிக்கிழமைகளில் வழிபடுகிறோம். நவக்கிரகங்களில் ஆயுள்காரகன் சனி பகவான். சனி கிரகத்தையும் கட்டுப்படுத்துபவர் நம் பெருமாள் தான். 

கோவிலுக்குச் சென்றால், இறைவனிடம் என்ன வேண்டும் என்று கோரிக்கை வைப்பீர்கள்?

perumal

பெரும்பாலானோர்.. முதலில் வேண்டுவது ஆரோக்கியம், ஆயுள்,செல்வம் தானே? இவை மூன்றுமே நமக்கு கிடைப்பதற்கு அருள் செய்வது பெருமாள்  என்று காலம் காலமாக கூறப்பட்டு வருகிறது. 
பெருமாளின் அனுக்கிரகம் கிடைப்பதற்கு சனிக்கிழமை விரதமே உகந்தது. 

சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி?

perumal

எப்போதும் பெருமாளுக்கான விரதமும், வழிபாட்டு முறைகளும் மிக எளிமையானது. சனிக்கிழமை காலை வேளையில் நீராடி, வீட்டில்  விளக்கேற்றி, பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும்.  வேண்டுதல்களை நிறைவேற்றித் தரச் சொல்லி சங்கல்பம் செய்து பூஜையை துவங்க வேண்டும்.

பகல் முழுவதும் சுவாமிக்கு படைத்த துளசி சேர்த்த நீர், பானகம், பழங்கள் , பால் அருந்தலாம். இயலாதவர்கள் எளிய காலை ஆகாரத்தை எடுத்துக்கொள்ளலாம்.

perumal

மாலை அருகில் உள்ள பெருமாள் ஆலயம் சென்று துளசி மாலை சார்த்தி வழிபாடு செய்யலாம். தாயாரையும் சேவித்து நம் வேண்டுதல்கள் நிறைவேற கோரிக்கை வைத்து பின் விளக்கேற்றி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். இரவு எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். விரத நாட்களில் அசைவ உணவுகளைத் தவிர்த்து விடுங்கள்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடிக்க ஆரோக்கியம், ஆயுள், செல்வம் பெருகி நாம் மகிழ்ச்சியான வாழ்வைப் பெறலாம்.