ஆயுர்வேத ஆஸ்பத்திரி, ஆனா அலோபதி மருந்து? எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரி சுரண்டல்!

 

ஆயுர்வேத ஆஸ்பத்திரி, ஆனா அலோபதி மருந்து? எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரி சுரண்டல்!

ஆயுர்வேத மருத்துவமனைக்கு எதற்கு அலோபதி மருந்துகள்? அதுவும் முறையாக பேக்கிங் செய்யாமல்? அவை எந்த ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்டது? எந்த நிறுவனத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டது? போன்ற பல்வேறு கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் ஆவணங்களும் இல்லை பதிலும் இல்லை.

திருநெல்வேலி, செங்கோட்டையில் இருந்து கேரளாவின் புனலூர் நோக்கிச் சென்ற ஒரு காரை, ஆரியங்காவு சோதனைச் சாவடியில் வைத்து கேரள போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேற்படி சோதனையில், காருக்குள் ஏராளமான தேங்காய்கள் குவித்துவைக்கப்பட்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தவே, அவற்றை அப்புறப்படுத்திப் பார்த்தபோது அவற்றுக்கு அடியில் 15 கிலோ அலோபதி மருந்து பொடிகள், 5 கிலோ காலி கேப்சூல்கள், மற்றும் சில மருந்து பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Kottakkal Jeeva Nursing Home

தேங்காய்களுக்கு அடியில் மருந்து பொருட்களை மறைத்து கடத்திவந்த ஓட்டுநர் விக்னேஷிடம் அதிகாரிகள் துருவிதுருவி விசாரணை நடத்தும்போது, அந்த மருந்துகள் புனலூர் பகுதியில் செயல்பட்டுவரும் பிரபலமான‌ கோட்டக்கல் கலைநாடு ஜீவா ஆயுர்வேத மருத்துவமனைக்கு எடுத்து செல்வது தெரியவந்தது. ஆயுர்வேத மருத்துவமனைக்கு எதற்கு அலோபதி மருந்துகள்? அதுவும் முறையாக பேக்கிங் செய்யாமல்? அவை எந்த ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்டது? எந்த நிறுவனத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டது? போன்ற பல்வேறு கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் ஆவணங்களும் இல்லை பதிலும் இல்லை. இதையடுத்து திருவனந்தபுரம் சிறப்புப் பிரிவு அதிகாரியிடம் விக்னேஷ் ஒப்படைக்கப்பட்டு விசாரணைதொடர்கிறது.