ஆயிரம் கோடி சொத்துக்களை ஆட்டையை போட மோடிக்கு புகழாரம்… ஐடி.,க்கு அஞ்சி பல்டியடித்த வீரமணி..!

 

ஆயிரம் கோடி சொத்துக்களை ஆட்டையை போட மோடிக்கு புகழாரம்… ஐடி.,க்கு அஞ்சி பல்டியடித்த வீரமணி..!

பெரியார் மணியம்மை அறக்கட்டளைக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் சில ஆயிரம் கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளன.

ஆயிரம் கோடி சொத்துக்களை ஆட்டையை போட மோடிக்கு புகழாரம்… ஐடி.,க்கு அஞ்சி பல்டியடித்த வீரமணி..!

”இந்த தேசமே பா.ஜ.க.வை ஆதரித்தாலும், எந்தக் கால கட்டத்திலும் தமிழகத்தில் அக்கட்சியை காலூன்ற விடவே கூடாது” என்று சபதம் போட்டுப் பேசினார். இதை அப்படியே உளவுத்துறை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ரிப்போர்ட்டாக கொடுத்திருக்கிறது. விளைவு, அது அவருக்கடுத்த அதிகார லாபிகளுக்குள் ஒரு ரவுண்டு வந்தது. அதன் பிறகு வருமான வரித்துறை மிக முழுமையாக அலர்ட் செய்யப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

கி.வீரமணி, பெரியார் கொள்கைகளையும், நாத்திக தத்துவங்களையும் ஊருக்குதான் உபதேசம் செய்வார், ஆனால் தனது பர்ஷனல் வாழ்விலும், குடும்ப உறவுகள் மத்தியிலும் எந்த தங்கு தடையையும் போதிக்க மாட்டார் என்று ஒரு விமர்சனம் உண்டு. இதை திரை கிழித்து, வெளிச்சம் போட்டுக் காட்டும் பொருட்டே கி.வீரமணி மீதான வருமான வரித்துறை நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள். இதனால் பயந்துபோன வீரமணி மோடியை பாராட்டி தள்ளியுள்ளார்.

அதில், சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் தொகைக் கட்டுப்பாட்டின் அவசியம் குறித்து பேசி இருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கான எம்.பி.,க் களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் கூடாது என்று கி.வீரமணி ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளியுள்ளார்.athi

இந்திய நாட்டின் வளர்ச்சி – எல்லாத் துறைகளிலும்  என்பதை நடைமுறையில் கொண்டு வந்து செயல்படுத்த விழையும் எந்த முயற்சிக்கும் முன்னோடித் திட்டம் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதேயாகும் .

1930 களிலேயே தந்தை பெரியாரும், அவர்தம் அரசியல் சாரா சுயமரியாதை இயக்கமும் இந்தியாவிலேயே முதன் முதலில் கர்ப்ப ஆட்சி – குடும்பக் கட்டுப்பாடு என்பதை கொள்கை வேலைத் திட்டமாகப் பிரச்சாரம் செய்தார்கள்! கர்ப்ப ஆட்சி’ எனும் நூலினையும் வெளியிட்டார்.

அப்போது மூடநம்பிக்கையில் மூழ்கியிருக்கும் பலர், அய்யோ பகவான் கொடுக்கிறான்; இவன் தடுக்கிறானே’ என்று சுயமரியாதைக்காரர்களையும், அவர்தம் தலைவர் தந்தை பெரியாரையும் இழித்தும், பழித்தும், எதிர்த்தும் பேசினர்.

அதுமட்டுமா? இப்போதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் – பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உள்பட பலரும், ஹிந்துக்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டால், அவர்கள் மைனாரிட்டிகளாகி விட்டு, மற்ற மதத்தவர்கள் (இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் மற்ற மதத்தவர்) குடும்பக் கட்டுப்பாட்டினை மத அடிப்படையில் செய்யாதபோது, நமது மதத்தினர் எண்ணிக்கை குறைந்துவிடாதா? எனவே, ஹிந்துக்கள் ஒவ்வொருவரும் 10 பிள்ளைகள் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று மதக் கண்ணோட்டத்தில் வெறித்தனமாகப் பேசினர்.

 பிரதமர் மோடி அவர்களது சுதந்திர தின உரையில், இந்த அம்சம் வலியுறுத்தப் பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நாட்டில் வறுமை, வேலை கிட்டாத் திண்டாட்டம் முதலியவைகளுக்கு விடை காணவேண்டிய இக்காலகட்டத்தில், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டினை வலியுறுத்தவேண்டும்.

அதேநேரத்தில், மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை நிர்ண யிக்கும் தற்போதைய முறையினை, குடும் பக் கட்டுப்பாட்டினை சிறப்பாக செயல் படுத்தும் மாநிலங்களைத் தண்டிக்கும் வகையில், எம்.பி.,க்கள் எண்ணிக்கையை குறைக்கவும் கூடாது. இந்தப் பிரச்சினையில் பிரதமர் – பெரியார் வழியில் வந்து நிற்கிறார். காலத்தின் கட்டாயம் இது என அவர் புகழ்ந்துள்ளார். 

பெரியார் மணியம்மை அறக்கட்டளைக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் சில ஆயிரம் கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளன. இதை நிர்வகிக்கும் அதிகாரத்தை தன் மகனுக்கு கி.வீரமணி எழுதிக் கொடுத்தபோது திராவிடர் கழகத்தினுள் பஞ்சாயத்து வெடித்தது. நிர்வாக முறைகேடுகள் தொடர்பான புகார்கள் வருமான வரித்துறைக்கு ரகசியமாக வந்தது. அவை இப்போது முழுக்க தூசி தட்டி கண்காணிக்கப்பட்டுள்ளதால் இந்த புகழ்ச்சியே பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.