ஆயிரம் கோடி சிலைகள் கடத்தல் வழக்கில் புழல் டூ நியுயார்க் – ஒரு கைதியின் டைரி!

 

ஆயிரம் கோடி சிலைகள் கடத்தல் வழக்கில் புழல் டூ நியுயார்க் – ஒரு கைதியின் டைரி!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 100 கிலோ தங்கம் கொள்ளைப் போன வழக்கில் கடந்த மாதம் ராஜப்பா என்ற பூசாரி கைது செய்யப்பட்டான் இல்லையா? அவனுக்கெல்லாம் தொழில் கத்துக்கொடுத்த குரு சுபாஷ்கபூர், கடந்த ஏழு வருடங்களாக புழல் சிறையில் எண்ணிய கம்பிகளையே திரும்பத்திரும்ப எண்ணிக்கொண்டிருக்கிறான்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 100 கிலோ தங்கம் கொள்ளைப் போன வழக்கில் கடந்த மாதம் ராஜப்பா என்ற பூசாரி கைது செய்யப்பட்டான் இல்லையா? அவனுக்கெல்லாம் தொழில் கத்துக்கொடுத்த குரு சுபாஷ்கபூர், கடந்த ஏழு வருடங்களாக புழல் சிறையில் எண்ணிய கம்பிகளையே திரும்பத்திரும்ப எண்ணிக்கொண்டிருக்கிறான். தொழில் சொல்லிக்கொடுத்த குருவே சிறைக்குப் போய்விட்டாலும், ராஜப்பாவுக்கு சபலம் அடங்கவில்லை. சாமி சிலையிலேயே கைவைத்த குற்றத்தால், காவல்துறை அவன்மேல் கைவைத்தது.

Subhash Kapoor

போகட்டும், சுபாஷ்கபூர் மேட்டருக்கு வருவோம். அன்னாரின் திருக்கரங்கள் தமிழக கோவில்களில் திருடி அமெரிக்காவில் விற்பனை செய்துவந்த குற்றத்தில் தற்போது நியூயார்க் நீதிமன்றமும் அவனை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டுமுதல் சிறையில் இருக்கும் சுபாஷ் கபூருடன் சேர்த்து, கபூரின் கூட்டாளிகள் சஞ்சீவி அசோகன், ரஞ்சித் கன்வர், ஆதித்ய பிரகாஷ், ரிச்சர்டுசாலமன், தீனதயாளன், வல்லபபிரகாஷ், நெயில, பெர்ரி ஸ்மித் ஆகியோரும் அமெரிக்க‌ கைது லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்தியா, பாகிஸ்தான், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இவர்கள் கடத்திய 2 ஆயிரத்து 900 சிலை மற்றும் கலைப்பொருட்களின் சர்வதேச மதிப்பு 900 கோடி ரூபாய்.