ஆம் ஆத்மி மீது குற்றம்சாட்டும் டெல்லி போலீஸ்… அமித்ஷாவின் தந்திரம் என்று விமர்சிக்கும் ஆம் ஆத்மி!

ஆம் ஆத்மி மீது குற்றம்சாட்டும் டெல்லி போலீஸ்… அமித்ஷாவின் தந்திரம் என்று விமர்சிக்கும் ஆம் ஆத்மி!

டெல்லி ஷாகின் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. டெல்லி சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பா.ஜ.க-வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தாக்கூர், போராடுபவர்கள் மீது துப்பாக்கியால் சுட வேண்டும் என்ற வகையில் பேசினார். அதைத் தொடர்ந்து தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சுடு நடத்துவது தொடர்கிறது. 

டெல்லி ஷாகின் பாக் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியது ஆம் ஆத்மியைச் சார்ந்தவர் என்று டெல்லி போலீஸ் கூறியதற்கு ஆம் ஆத்மி கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி ஷாகின் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. டெல்லி சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பா.ஜ.க-வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தாக்கூர், போராடுபவர்கள் மீது துப்பாக்கியால் சுட வேண்டும் என்ற வகையில் பேசினார். அதைத் தொடர்ந்து தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சுடு நடத்துவது தொடர்கிறது. 

shaheen-bagh

இந்த நிலையில் இரண்டாவதாக துப்பாக்கிச்சூடு நடத்திய கபீர் குஜ்ஜார் என்பவர் ஆம் ஆத்மியைச் சார்ந்தவர் என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர். அவர் கடந்த ஆண்டு ஆம் ஆத்மியில் சேர்ந்த புகைப்படம் உள்ளிட்டவற்றை ஆதாரமாக வெளியிட்டிருந்தனர். 
ஆனால் இதை ஆம் ஆத்மி மறுத்துள்ளது. கடந்த ஆண்டு இணைந்த புகைப்படம் உள்ளிட்டவற்றை பத்திரமாக வைத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் கருத்துக் கணிப்புகள் எல்லாம் ஆம் ஆத்மிக்கு சாதகமாக வரவே மக்களை ஏமாற்றும் நாடகத்தை பா.ஜ.க செய்து வருவதாக குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக அந்த கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து ஆம் ஆத்மி நிர்வாகி சஞ்சய் சிங் கூறுகையில், “டெல்லி போலீஸ் பா.ஜ.க செய்தித் தொடர்பாளரைப் போல பேசுகிறது. இது பா.ஜ.க-வின் சதி. அமித்ஷாவின் தந்திரங்களுள் இதுவும் ஒன்று. டெல்லி போலீஸ் கமிஷனர் தன்னுடைய சட்டையில் தாமரை சின்னத்தைக் குத்திக்கொள்ளலாம்” என்று காட்டமாக கூறினார்.