ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் பெண் எம்எல்ஏ அல்கா லம்பா

 

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் பெண் எம்எல்ஏ அல்கா லம்பா

கடந்த சட்டமன்ற தேர்தலில் டெல்லி மாநிலத்தின் சாந்தினி சவுக் தொகுதியில் வெற்றி பெற்றார்.

புதுடெல்லி:  ஆம் ஆத்மி கட்சியின்  பெண் எம்.எல்.ஏ. அல்கா லம்பா அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

alka

ஆம் ஆத்மி கட்சியில் கடந்த ஆறு ஆண்டுகளாக இருந்து வந்தவர்  அல்கா லம்பா. கடந்த சட்டமன்ற தேர்தலில் டெல்லி மாநிலத்தின் சாந்தினி சவுக் தொகுதியில் வெற்றி பெற்றார். இருப்பினும்  சமீபகாலமாக ஆம் ஆத்மி கட்சிக்கும் அவருக்கும் இடையே மோதல் நிலவி வந்தது.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி தோற்றதற்கு முதல்வர் கெஜ்ரிவால்தான் காரணம் என்று பகிரங்கமாகக் குற்றச்சாட்டினார். 

alka

இதையடுத்து ஆம்  ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அல்கா லம்பா  நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். மேலும் ஆம் ஆத்மி கட்சியில் கடந்த 6 வருடப் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது. இது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக உள்ளது. அனைவருக்கும்  நன்றி’ என்று குறிப்பிட்டார். 

இந்நிலையில் அல்கா லம்பா காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை சோனியா காந்தியை நேரில் சந்தித்து காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார்.