ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. அல்கா லம்பா ராஜினாமா!

 

ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. அல்கா லம்பா ராஜினாமா!

ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. அல்கா லம்பா அவரது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. அல்கா லம்பா அவரது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

கடந்த 1984 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தை கருத்தில் கொண்டு முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா பட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்று டெல்லி சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ அல்கா லம்பா ஆதரவு தெரிவிக்கவில்லை. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி அவரை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதன் காரணமாக அல்கா அவரது கட்சிப் பதவியையும் எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்யயுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அல்கா லம்பா, ‘ராஜீவ் காந்தி நாட்டிற்காக நிறைய தியாகம் செய்திருக்கிறார். அதனால் அவரின் பாரத ரத்னாவை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைக்கு நான் ஆதரவு தரவில்லை. நான் கட்சியின் முடிவை எதிர்த்து நின்றதால், ராஜினாமா செய்யும்படி கேட்டுக் கொண்டனர். ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்’ என்று விளக்கமளித்துள்ளார்.