ஆம்னி பேருந்து கட்டணம் இரு மடங்கு உயர்வு.. பயணிகள் அதிர்ச்சி

 

ஆம்னி பேருந்து கட்டணம் இரு மடங்கு உயர்வு.. பயணிகள் அதிர்ச்சி

கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அதிர்ச்சியளிக்கும் செய்தியை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 45 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதனால் தினக்கூலி பெறுபவர்கள், ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மக்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு 34 வகையான கடைகளுக்கு அனுமதி அளித்தது. இதனால் விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அதிர்ச்சியளிக்கும் செய்தியை வெளியிட்டுள்ளார்.

ttn

ஏற்கனவே அரசு பேருந்துகளின் கட்டணத்தை விட ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகமாக இருக்கும் நிலையில், தற்போது மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஒரு கி.மீ-க்கு 1.60 ரூபாய் என கட்டணம் இருந்த நிலையில், 3.20 ரூபாயாக கட்டணம் வசூலிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கு முடிந்து பேருந்து சேவை தொடங்கும்போது புதிய கட்டணம் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.