ஆம்னி பேருந்துகளில் அதிரடி ரெய்டு ! கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை !

 

ஆம்னி பேருந்துகளில் அதிரடி ரெய்டு ! கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை !

ஆயுதப் பூஜையை முன்னிட்டு வெளியூர் செல்லும் ஆம்னிப் பேருந்தகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க தமிழக அரசு சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆயுதப் பூஜையை முன்னிட்டு வெளியூர் செல்லும் ஆம்னிப் பேருந்தகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க தமிழக அரசு சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிக அரசு சிறப்பு பேருந்துகள் அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து அக்.4 முதல் 6-ஆம் தேதி தினசரி இயக்கக் கூடிய 2,225 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 1,695 பேருந்துகள் என மூன்று நாள்களும் சோ்த்து 6,145 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருப்பூரிலிருந்து 280, கோயம்புத்தூரிலிருந்து 717, பெங்களுரிலிருந்து 245 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. ஆயுதபூஜை முடிந்த பின்பு அக்டோபர் 8, 9 தேதிகளில், திருப்பூருக்கு 266, கோயம்புத்தூருக்கு 490, பெங்களுருக்கு 237 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

omnikovai

எனினும் பெரும்பாலான மக்கள் ஆம்னி பேருந்துகளில் செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது விடுமுறை தினம் என்பதால் கிராக்கி அடிப்படையில் ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொதுவாக சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் சனி, ஞாயிறு நாட்களில் ரூ.600 – 1500 வரையும், சென்னைகோவைக்கு ரூ.700 – 1,700 வரையில்லும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் ஆயுத பூஜையை காரணம் காட்டி  சென்னையிலிருந்து மதுரைக்கு ரூ.1,700 முதல் ரூ.2,500 வரையிலும், சென்னைகோவைக்கு ரூ.1,700 முதல் 2,000 வரையும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டம் வசூலிக்கப்படுகிறதாக என கண்காணிக்க சிறப்பு குழு அமைத்துள்ளது. போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆங்காங்கு திடீர் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.