ஆம்னி பேருந்தில் பயணிப்பவரா நீங்கள்? உஷார்! புது முறைகேடு அம்பலம்..

 

ஆம்னி பேருந்தில் பயணிப்பவரா நீங்கள்? உஷார்! புது முறைகேடு அம்பலம்..

ஆம்னி பேருந்து ரெட் பஸ் மூலம் டிக்கெட் புக் செய்வபவர்களுக்கு புக் செய்யும் போது பேருந்தின் நேரம் ஒன்றாகவும், புக் செய்த பின் வரும் குறுஞ்செய்தியில் வேறொரு நேரம் காட்டுவதும் பயணிகளுக்கு பெரும் குழப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, நேரம் தவறாக காட்டுவதால் பேருந்தை புடிக்க முடியாத சூழல் ஏற்பட்டு பண விரயமும் ஏற்படுவதாக பயணி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

ஆம்னி பேருந்து ரெட் பஸ் மூலம் டிக்கெட் புக் செய்வபவர்களுக்கு புக் செய்யும் போது பேருந்தின் நேரம் ஒன்றாகவும், புக் செய்த பின் வரும் குறுஞ்செய்தியில் வேறொரு நேரம் காட்டுவதும் பயணிகளுக்கு பெரும் குழப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, நேரம் தவறாக காட்டுவதால் பேருந்தை புடிக்க முடியாத சூழல் ஏற்பட்டு பண விரயமும் ஏற்படுவதாக பயணி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக ராஜீவ் காந்தி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில், “ஊரில் இருந்து வந்த தம்பி ரிட்டர்ன் செல்வதற்காக நேற்று இரவு ரெட்பஸ் ஆப் மூலம் டிக்கெட் புக் செய்தேன். புக் செய்தபோது நேரம் இரவு 9.25. அசோக் பில்லரில் இருந்து கும்பகோணம் செல்வதற்கு 10.35 க்கு எஸ்.எஸ்.ஏ டிராவல்ஸ் என்ற பேருந்தை காட்டியது. புக் செய்த பிறகு வந்த டிக்கெட்டை பார்த்தால் அதிர்ச்சி. போர்டிங் நேரம் என்று 9.30 ஐ காட்டுகிறது. கொடுத்திருந்த எண்ணுக்கு போன் செய்தால் பேருந்து கோயம்பேட்டில் இருந்து கிளம்பி அசோக் நகரை அடைந்துவிட்டது என்கிறார்கள். எனக்கு காட்டிய நேரத்தை விளக்கினால் நெட்வொர்க் பிரச்சினை என்று முதலில் சொன்னவர் பின்னர் அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று மாற்றி பேச தொடங்கிவிட்டார். டிரைவராம். மீடியாவில் இருப்பவன் தான் சார்… இது பெரிய மோசடியாக இருக்கிறது என்று கேட்டதும் எங்க ஓனரே வக்கீல் தான் உங்களால முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என்றார்.

ticket booking

 

சில நிமிடங்களில் ஓனர் என்று ஒரு பெண்மணி 7010559826 என்ற எண்ணில் இருந்து லைனுக்கு வந்தார். அவர் சொன்ன விளக்கம் தான் பெரிய அதிர்ச்சியை அளித்தது. அதாவது ரெட்பஸ்சில் காட்டப்படும் நேரம் என்பது பெருங்களத்தூரில் பேருந்து கிளம்பும் நேரமாம். அப்படித்தான் எல்லா பேருந்துகளுக்கும் காட்டும் என்று அடித்து சொன்னதுடன் அதற்கான ஆதாரங்களை அனுப்புவதாக சொல்லி பிற பேருந்து நேரங்களின் நேர ஸ்க்ரீன்ஷாட்களை மட்டும் எடுத்து அனுப்புகிறார்.

பல ஆண்டுகளாகவே ரெட்பஸ் மூலம் தான் டிக்கெட் புக் செய்து பயணிக்கிறேன். எந்த நேரம் போர்டிங் நேரமாக காட்டுகிறதோ அது நாம் ஏற இருக்கும் இடத்தை தான் குறிக்கும். எல்லோருமே அப்படித்தான் பயணிக்கிறோம். இது என்னடா புது விளக்கமா இருக்கு என்று நொந்துகொண்டேன்.
இந்த வாக்குவாதங்கள் முடிந்த பிறகு ரெட்பஸ் ஆப்பை செக் செய்தேன். மணி 9.47. அதில் அதே பஸ் 10.35 நேரத்தை காட்டி புக் செய்ய சொன்னது. டிரைவரோ வண்டி ஏர்போர்ட்டை தாண்டிவிட்டது என்கிறார். புக் செய்துவிட்டு டைம் மெஷினில் போய் பஸ்சை பிடிக்கும் வழி எனக்கு தெரியவில்லை. வக்கீல் நடத்தும் டிரவால்ஸ் என்றால் எது வேண்டுமானாலும் செய்யலாமா? எப்படி வேண்டுமானாலும் விளக்கம் தரலாமா? 310 ரூபாய் பறிபோனதும் மன உளைச்சலும் தான் மிச்சம். இதை நுகர்வோர் கோர்ட்டுக்கு எடுத்து செல்லலாமா? தகுந்த ஆலோசனை தேவை” என பதிவிட்டுள்ளார்.