ஆமா இவரு பெரிய இன்கம் டேக்ஸ் ஆபிசரு? அஜித்துக்கு ஆதரவாக பேசி ஆப்பு வாங்கிய அன்புமணி

ஆமா இவரு பெரிய இன்கம் டேக்ஸ் ஆபிசரு? அஜித்துக்கு ஆதரவாக பேசி ஆப்பு வாங்கிய அன்புமணி

கடந்த சில தினங்களாக நடந்த ஐ.டி ரெய்டுகள் தான் சமூக வலைத்தளங்கள் முழுதும் ஹாட் டாபிக். கான்செப்ட் இல்லாமல் சுற்றிய மீம் கிரியேட்டர்ஸ்க்கும் நல்ல கண்டெண்டாக அமைந்தது ரெய்டு நடந்த மூன்று நாளும். அஜித் அல்லது விஜய் பற்றி ஏதேனும் சிறு செய்தி வந்தால் கூட ட்விட்டரில் அக்கப் போரை ஆரம்பித்து விடுவார்கள் அவர்களின் ரசிகர்கள். 

vijay-and-ajith

மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயை படப்பிடிப்பில் இருந்து காரில் அழைத்துச் சென்று அவரது வீட்டில் வைத்து இரண்டு நாட்களாக தீவிர விசாரணை நடத்தினர் வருமானவரித் துறையினர். இதை பயன்படுத்திக் கொண்ட அஜித் ரசிகர்கள் ‘#காருக்குள்கதறியவிஜய்’ என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்டிங் ஆக்கினார்கள். பதிலுக்கு களம் இறங்கிய விஜய் ரசிகர்கள்’ #பாவாடைக்குள்_அஜித்’ என்ற ஹாஷ்டாக்கை ட்ரெண்டிங்கில் வரச்செய்து எதிராணியினருக்கு டப் கொடுத்தனர். 2020-ல் இளைஞர்களால் இந்தியா வல்லரசு ஆகும் என்று கனவு கண்ட கலாமின் ஆவி கூடஇவர்களின் சண்டையினைகே  கண்டு சற்று ஆட்டம் கண்டிருக்கும்.

இந்நிலையில், திரைத்துறையில் அஜித் ஒருவரை தவிர வேறு யாரும் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்று அன்புமணி ராமதாஸ் ஒரு ட்வீட்டைத் தட்டிவிட்டிருக்கிறார். இதை வைத்து நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.