ஆப்பு வைத்த அமைச்சர்கள்… எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு..!

 

ஆப்பு வைத்த அமைச்சர்கள்…  எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு..!

நா கூசாமல் தன்னுடைய திட்டம் என்பதுபோல சொல்லி இதை எடப்பாடி பழனிசாமி ஆரம்பித்து வைப்பார் என்று ஆப்பு வைத்திருக்கிறார்கள்.

பிரதமர் மோடி வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு கிளம்பி விட்டார்.  நாளை கிளம்பும் அவர் அடுத்த மாதம் 10ம் தேதி தமிழகம் திரும்புகிறார். 

 என்ன ஒரு வித்தியாசம் பாஜக தலைவர் அமித் ஷாவை நம்பி தைரியமாக வெளிநாடு கிளம்புகிறார். அதே போல் ஐஏஎஸ் அதிகாரிகளை நம்பி  செல்கிறார். ஜெயலலிதா ஐபிஎஸ் அதிகாரிகளை அதிகம் நம்பினார். ஐஏஎஸ்களிடம் ஆலோசனை கேட்பார்.  ஆனால் எடப்பாடி பழனிசாமியோ  முழுக்க முழுக்க ஐஏஎஸ் சாம்ராஜ்ஜியத்தையே நம்பி உள்ளார்.

 modi

இவர் அறிவிக்கும் திட்டங்களைக் கூட அமைச்சர்களுக்கு சொல்வதில்லையாம். ஏன் என்று விசாரித்தபோது சில  திட்டங்கள் குறித்து அமைச்சரிடம் கடந்த காலங்களில் விவாதித்தாராம். அதை அப்படியே சிலர் நா கூசாமல் தன்னுடைய திட்டம் என்பதுபோல சொல்லி இதை எடப்பாடி பழனிசாமி  ஆரம்பித்து வைப்பார் என்று  ஆப்பு வைத்திருக்கிறார்கள்.  அதனால் திட்டங்களை அடக்கி வாசிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

 சாதாரண திட்டங்களிலேயே அமைச்சர்களை நம்ப முடியவில்லை. வெளியூர் பயணத்தின்போது தமிழக அரசியல் மற்றும் நிர்வாகத்தை இவர்களை நம்பி எப்படி ஒப்படைப்பது என்று யோசித்துதான் ஐஏஎஸ் மற்றும் தன் உறவினர்களான காவல் துறையில் இருக்கும் சிலரிடம் ரகசிய வேலைகள் சிலவற்றை ஒப்படைத்துள்ளாராம். சொந்தக்கட்சிக்காரர்கள் மீது அவ்வளவுதான் நம்பிக்கை.