ஆப்பிள் பழ சைஸில் ஒரு ஸ்மால் பேபி!

 

ஆப்பிள் பழ சைஸில் ஒரு ஸ்மால் பேபி!

அமெரிக்காவில் ஆப்பிள் பழ அளவிற்கு பிறந்த குழந்தையை மருத்துவர்கள் பிழைக்க வைத்து சாதனை படைத்துள்ளனர். 

அமெரிக்காவில் ஆப்பிள் பழ அளவிற்கு பிறந்த குழந்தையை மருத்துவர்கள் பிழைக்க வைத்து சாதனை படைத்துள்ளனர். 

கலிபோர்னியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் 245 கிராம் எடையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கிட்டதட்ட ஒரு ஆப்பிளின் எடைதான் அந்த குழந்தை இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் குழந்தைக்கு சபே என பெயரிட்டன. பிறந்து ஒரு மணிநேரத்தில் குழந்தை இறந்துவிடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் 5 மாதங்களாக அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை கொடுத்த மருத்துவர்கள் குழந்தையை சாதாரண குழந்தை போன்று மாற்றியுள்ளனர். தற்போது அந்த குழந்தை 2.2 கிலோகிராம் எடையில் உள்ளது. வாழ்வதற்கான போராட்ட குணத்தால் மறு ஜென்மன் எடுத்து குழந்தை பிழைத்துள்ளதாக அந்த மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை உலகில் பிறந்த குழந்தைகளிலேயே சபே தான் மிகவும் சிறிய குழந்தை என கூறப்படுகிறது.