ஆப்பிள் நிறுவனத்தின் பிரவுசரில் பிழையை கண்டுபிடித்த கூகுள்!

 

ஆப்பிள் நிறுவனத்தின் பிரவுசரில் பிழையை கண்டுபிடித்த கூகுள்!

ஆப்பிள் நிறுவனத்துக்கு சொந்தமான சஃபாரி பிரவுசரில் கூகுள் நிறுவனம் பிழை கண்டறிந்துள்ளது.

கலிபோர்னியா: ஆப்பிள் நிறுவனத்துக்கு சொந்தமான சஃபாரி பிரவுசரில் கூகுள் நிறுவனம் பிழை கண்டறிந்துள்ளது.

ஆப்பிள் சாதனங்களில் பயன்படுத்துவதற்கு என்று கடந்த 2003-ஆம் ஆண்டு சஃபாரி என்ற வெப் பிரவுசரை அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த பிரவுசரின் மொபைல் வெர்ஷன் 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மேலும் 2007 – 2012 காலகட்டங்களில் விண்டோஸ் இயங்குதளத்திலும் பயன்படுத்தும் வகையில் சஃபாரி பிரவுசர் புழக்கத்தில் இருந்தது. உலகில் பல கோடி மக்கள் சஃபாரி வெப் பிரவுசரை பயன்படுத்தி வருகிறார்கள்.

safari

இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் போட்டி நிறுவனமாக கருதப்படும் கூகுள் நிறுவனமானது சஃபாரி பிரவுசரில் முக்கியமான சில பிழைகளை கண்டறிந்துள்ளது. அதாவது சஃபாரி பிரவுசரை பயன்படுத்தும் பயனர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு அந்த பிரவுசர் அனுமதிக்கிறது. பயனர்கள் இணையத்தில் உலவும் அனைத்து விவரங்களையும் கண்காணிக்க சஃபாரி பிரவுசர் அனுமதிப்பதாக கூகுள் நிறுவனம் பிழை கண்டறிந்துள்ளது. இதனால் பயனர்களின் சென்சிடிவ்வான தகவல்கள் அவர்களுக்கு தெரியாமலேயே கண்காணிக்கப்படுகிறது. இது சஃபாரி பிரவுசரை பயன்படுத்தும் பயனர்களுக்கு வருத்தம் அளிக்க கூடிய செய்தியாக பார்க்கப்படுகிறது.