ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாடு திருப்பதிகரமாக இல்லையாம்… அதனால் டிம் குக் சம்பளமும் ரூ.84 கோடியா குறைந்து போச்சாம்

 

ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாடு திருப்பதிகரமாக இல்லையாம்… அதனால் டிம் குக் சம்பளமும் ரூ.84 கோடியா குறைந்து போச்சாம்

கடந்த ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் நிதி செயல்பாடு திருப்பதிகரமாக இல்லாததால், அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. டிம் குக்கின் ஆண்டு சம்பளம் ரூ.84 கோடியாக குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பிரபலமான அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.) இருப்பவர் டிம் குக். 2019ம் ஆண்டில் இவருடைய சம்பளம் குறைந்து போச்சு என்ற தகவல்தான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. சென்ற ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் நிதி செயல்பாடு திருப்திகரமாக இல்லையாம். அதனால்தான் டிம் குக்கின் ஆண்டு சம்பளம் குறைந்து போச்சாம்.

ஆப்பிள் நிறுவனம்

அந்த ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை இலக்கை காட்டிலும் 28 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதாம். 2018ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை இலக்கை காட்டிலும் 100 சதவீதம் அதிகரித்து இருந்ததாம். அதனால் கடந்த ஆண்டில் தனது நிதி செயல்பாடு திருப்திகரமாக இல்லை ஆப்பிள் தெரிவித்துள்ளது. இதனால் டிம் குக்கின் ஆண்டு சம்பளம் ரூ.84 கோடியாக குறைந்துள்ளது. 2018ம் ஆண்டில் டிம் குக் ஆண்டு சம்பளமாக ரூ.113 கோடி வாங்கி இருந்தார். டிம் குக்கின் ஆண்டு அடிப்படை சம்பளம் ரூ.22 கோடிதான். அதனுடன் போனஸ் மற்றும் பல்வேறு இழப்பீடுகள் வழங்கப்படும். 

ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனத்தின் செயல்திறன் அடிப்படையில் டிம் குக்கின் ஊக்க போனஸ் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது நிறுவனத்தின் செயல்திறன் நன்றாக இருந்தால் அவருக்கான ஊக்க போனஸ் அதிகரிக்கும். நிறுவனத்தின் செயல்திறன் குறைந்தால் அவருடைய ஊக்க போனஸ் குறையும். கடந்த ஆண்டில் டிம் குக்குக்கு ஊக்க போனசாக ரூ.55 கோடி மட்டுமே வந்தது. 2018ம் ஆண்டில் டிக் குக் ஊக்க போனசாக ரூ.86 கோடி வாங்கி இருந்தார். 2019ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை இலக்கை காட்டிலும் 28 சதவீதம் மட்டுமே உயர்ந்ததுதான் இதற்கு காரணம். இந்த தகவலை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.