‘ஆப்பிள் ஃபெஸ்ட்’ அமேசானில் தொடக்கம்; ஆப்பிள் நிறுவன பொருட்களுக்கு சிறந்த சலுகைகள்

 

‘ஆப்பிள் ஃபெஸ்ட்’ அமேசானில் தொடக்கம்; ஆப்பிள் நிறுவன பொருட்களுக்கு சிறந்த சலுகைகள்

இந்தியாவில் அமேசான் இணையதளத்தில் ‘ஆப்பிள் ஃபெஸ்ட்’ சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது.

மும்பை: இந்தியாவில் அமேசான் இணையதளத்தில் ‘ஆப்பிள் ஃபெஸ்ட்’ சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது.

இந்தியாவில் அமேசான் இணையதளத்தில் ‘ஆப்பிள் ஃபெஸ்ட்’ சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது. இதில் பல ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்கு பிரத்யேகமான ஆஃபர்கள் வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு விற்பனை அடுத்த சனிக்கிழமை வரை (டிச.14) நடைபெறும். இந்த 7 நாள் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப் மற்றும் பிற சாதனங்களுக்கு ஆஃபர்கள் வழங்கப்படுகின்றது.

நோ காஸ்ட் இஎம்ஐ அடிப்படையில் ஐபோன்களுக்கு 16,000 வரை தள்ளுபடி வழங்குவதாக அமேசான் தெரிவித்துள்ளது. ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.74,999 விலையிலும், ஐபோன் 6S ஸ்மார்ட்போன் ரூ.24,999 விலையிலும் மற்றும் ஐபோன் 6 ரூ.21,999 விலையிலும் விற்கப்படுகிறது.

இது தவிர ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் 8, ஐபோன் 8 ப்ளஸ் மற்றும் பிற ஐபோன் மாடல்களும் நோ காஸ்ட் இஎம்ஐ-இல் கிடைக்கிறது. சமீபத்தில் அறிமுகமான மேக்புக் ஏர் (2018) விலை ரூ.1,05,900 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் மேக்புக் ஏரின் விலை குறைக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை ஆகும். மேக்புக் ஏர் 2017 வேரியண்ட்டின் விலை ரூ.57,990 விலையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபருடன் நோ காஸ்ட் இஎம்ஐ-யும் வழங்கப்படுகிறது.

ஆப்பிள் ஃபெஸ்ட் சேலில் 6-வது தலைமுறை ஆப்பிள் ஐபேட் 9.7 இன்ச் WiFi-ன் விலை ரூ.23,999 ஆக குறைந்துள்ளது. மேலும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களை பயன்படுத்தி ரூ.9,960 வரை கூடுதல் தள்ளுபடியை பெறலாம். பீட்ஸ் இபி (ML992ZM/A) இயர்போன்களுக்கும் தற்போது தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் பிளாக் மற்றும் புளூ நிற வேரியண்ட்களின் விலை ரூ.5,799 ஆக குறைந்துள்ளது.