ஆப்கானிஸ்தான் மருத்துவமனை தாக்குதல் – பலி எண்ணிக்கை 24ஆக உயர்வு

 

ஆப்கானிஸ்தான் மருத்துவமனை தாக்குதல் – பலி எண்ணிக்கை 24ஆக உயர்வு

ஆப்கானிஸ்தான் மருத்துவமனை தாக்குதலில் பலி எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.

காபூல்: ஆப்கானிஸ்தான் மருத்துவமனை தாக்குதலில் பலி எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.

குழந்தைகள் மற்றும் செவிலியர்கள் கொல்லப்பட்ட ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீதான தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலின் மேற்கே அமைந்துள்ள மகப்பேறு மருத்துவமனையில் நேற்று மூன்று தீவிரவாதிகள் திடீரென புகுந்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த கொடூர தாக்குதலில் புதிதாக பிறந்த குழந்தைகள் இருவர், அவர்களின் தாயார்கள், செவிலியர்கள் உட்பட 14 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவலில் கூறப்பட்டிருந்தது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தானின் துணை சுகாதார அமைச்சர் வாகீத் மஜ்ரோ கூறுகையில் இந்த தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாகவும், 16 பேர் காயமடைந்ததாகவும் கூறினார்.