ஆப்கானிஸ்தான் பனிச்சரிவு: 21 பேர் பலி – இறப்பு எண்ணிக்கை உயரும் என அச்சம்

 

ஆப்கானிஸ்தான் பனிச்சரிவு: 21 பேர் பலி – இறப்பு எண்ணிக்கை உயரும் என அச்சம்

ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்து உள்ளது.

காபூல்: ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்து உள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் ஆப்கானிஸ்தானில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மேலும் அதிகமான பனிச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்பதால் அங்கு பல நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் உள்ள டேகுண்டி மாகாணத்தில் ஏற்பட்ட பனிச்சரிவுகளில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இறந்த 21 பேர் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

afganistan

இதுதவிர பனிச்சரிவு சம்பவத்தையொட்டி ஏழு பேர் காணாமல் போயுள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சுமார் 50 வீடுகள் பனிச்சரிவுகளால் அழிக்கப்பட்டுள்ளன. கடினமான வானிலை காரணமாக இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பனிச்சரிவு மற்றும் பலத்த பனிப்பொழிவு காரணமாக ஆப்கானிஸ்தானில் பல முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.