ஆப்கானிஸ்தானில் 1500 தலிபான் சிறைக் கைதிகள் விடுதலை – அதிபர் அஷ்ரப்கானி உத்தரவு

 

ஆப்கானிஸ்தானில் 1500 தலிபான் சிறைக் கைதிகள் விடுதலை – அதிபர் அஷ்ரப்கானி உத்தரவு

அமைதி நடவடிக்கைக்காக ஆப்கானிஸ்தானில் 1500 தலிபான் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அதிபர் அஷ்ரப்கானி தெரிவித்துள்ளார்.

காபூல்: அமைதி நடவடிக்கைக்காக ஆப்கானிஸ்தானில் 1500 தலிபான் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அதிபர் அஷ்ரப்கானி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அமெரிக்கா மற்றும் தலிபான்களுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருகிறது.

ttn

இதற்கிடையில் அங்கு நிலையான அமைதி ஏற்படுத்துவதற்கு ஆப்கானிஸ்தான் அரசும், தலிபான் தீவிரவாதிகளும் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் அஷ்ரப்கானி நடவடிக்கை எடுத்து வருகிறார். சமீபத்தில் 2-வது முறையாக அதிபர் பொறுப்பேற்ற அவர் இது தொடர்பாக 2 பக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி நாட்டில் அமைதி ஏற்படுத்த சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 1500 தலிபான் தீவிரவாதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளார். அரசுப்படை மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதலில் ஈடுபட மாட்டோம் என அவர்களிடம் எழுத்து மூலம் உத்தரவாதம் பெற்ற பிறகு விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.