ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகள் விரைவில் விரட்டியடிக்கப்படுவர்: அந்நாட்டு பிரதமர் சூளுரை

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகள் விரைவில் விரட்டியடிக்கப்படுவர்: அந்நாட்டு பிரதமர் சூளுரை

ஆப்கானிஸ்தான் நாட்டில் முகாமிட்டிருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் இடங்கள் அனைத்தும் தகர்த்தெறியப்பட்டு, தீவிரவாதிகள் அனைவரும் விரைவில் விரட்டியடிக்கப்படுவர் என அந்நாட்டு பிரதமர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் நகரில் மக்கள் கூடும் முக்கியமான பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பயங்கரவாத கும்பல் குண்டு வெடிப்பை நடத்தியது. இத்துயர சம்பவத்தில் 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தின் போது குறிப்பிட்ட இடத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடி இருந்ததாக தகவல்கள் தெரியவந்துள்ளன.

பயங்கரவாதிகளின் இந்த கொடூர சம்பவத்திற்கு ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரதமர் அஷ்ரப் கனி கடும் கண்டனம் தெரிவித்து சம்பவத்தை அரங்கேற்றிய தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “சுபநிகழ்ச்சிகளில் தீவிரவாதிகள் இது போன்ற செயலில் ஈடுபடுவது மிகவும் கோழைத்தனமாக உள்ளது. இதில் உயிரிழந்த மக்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை இந்த அரசு தெரிவித்துக் கொள்கிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள பயங்கரவாதிகளின் இடங்களை நிச்சயம் ஆப்கானிஸ்தான் ராணுவம் தகர்த்தெறியும். அவர்கள் விரைவில் இந்நாட்டில் இருந்து விரட்டியடிக்கபடுவர் எனவும் கூறினார்.

இத்தகைய கொடூர சம்பவத்திற்கு மக்களிடமும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மக்கள் சார்பில், விரைவில் அமெரிக்கா – தாலிபான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல்கள் வருகிறது. இந்த பேச்சுவார்த்தையின் மூலம் இந்த பயங்கரவாதிகளின் அத்துமீறலுக்கு முடிவு கிடைக்குமா? என கேள்வி எழுப்பப்பட்டது.

 இதற்கு பதிலளித்த அமெரிக்க தூதரகம், நிச்சயம் மக்களின் நலனுக்காக அமெரிக்கா நல்ல முடிவை எடுக்கும். இதற்கு தாலிபான் அமைப்பும் கட்டுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தனர்.