ஆபாச படங்கள் பார்ப்போர் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்த ஊரடங்கு! – அதிர்ச்சி தகவல்

ஆபாச படங்கள் பார்ப்போர் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்த ஊரடங்கு! – அதிர்ச்சி தகவல்

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடப்பவர்கள் பலர் ஆபாச படங்களைப் பார்ப்பதாகவும், கடந்த சில மாதங்களில் ஆபாச படங்கள், வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பொது மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். இதனால், இந்த ஆண்டு தேவையில்லாத கர்ப்பம் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இதனால் கருக்கலைப்புக்காக பல பெண்கள் மருத்துவமனைக்கு வந்துகொண்டிருப்பதாகவும் அதிர்ச்சி செய்தி வெளியானது. சமீபத்திய ஆய்வின்படி, ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் ஆன்லைன் மூலம் ஆபாச படங்களை பார்வையிடுபவர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட 95 தசவிகிதம் அதிகரித்துள்ளது. இதில் 89 சதவிகிதம் பேர் தங்கள் ஸ்மார்ட்போன் மூலமாக பார்ப்பது தெரியவந்துள்ளது. மொபைல் டேட்டா மூலமாக ஆபாச படம் பார்ப்பதும், 30 முதல் 40 சதவிகிதம் பேர் பகல் நேரத்திலேயே ஆபாச படங்களைப் பார்ப்பதும் தெரியவந்துள்ளது.

watching-mobile-78

இதில் இன்னொரு அதிர்ச்சியான செய்தியை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். பெரியவர்கள், இளம் வயதினர் பங்கேற்கும் ஆபாச காட்சி, புகைப்படங்களை விட குழந்தைகள் வதை ஆபாச படங்களைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம். அதுமட்டுமல்ல பள்ளி மாணவர்கள் மத்தியிலும் ஆபாச படங்கள் பார்ப்பது அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலம் இன்னும் என்ன என்ன பாதிப்பை எல்லாம் கொண்டுவருமோ என்ற அச்சத்தை இந்த ஆய்வு முடிவு ஏற்படுத்தியுள்ளது.