ஆபாச படங்களை வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்த முன்னாள் ஐஏஎஸ் ! பெண் ஊழியர்கள் கண்டித்ததால் மன்னிப்பு கேட்டார் !!

ஆபாச படங்களை வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்த முன்னாள் ஐஏஎஸ் ! பெண் ஊழியர்கள் கண்டித்ததால் மன்னிப்பு கேட்டார் !!

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அரசாங்க அதிகாரியான அவர் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக தாமாக முன்வந்து அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அதிகாரி உள்ள வாட்ஸ்அப் குழுவில் ஏற்கனவே  பணியாற்றிய மற்றும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளனர்.

குஜராத் மாநிலம் காந்தி நகர் அருகே சக ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ள வாட்ஸ்அப் குழுவில் ஆபாசமான படங்களை வெளியிட்டதாக  ஒரு மூத்த அரசாங்க  அதிகாரி புகாரில் சிக்கி உள்ளார். 

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அரசாங்க அதிகாரியான அவர் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக தாமாக முன்வந்து அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அதிகாரி உள்ள வாட்ஸ்அப் குழுவில் ஏற்கனவே  பணியாற்றிய மற்றும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளனர்.

video-chats-78

கடந்த வியாழக்கிழமை இரவு, அதிகாரி தனது நிர்வாண படங்களை குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த படங்கள்  குழுவின் உறுப்பினர்கள், அனைத்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் வைரலாக பரவிவிட குழு உறுப்பினர்கள் அனைவரும் அதிர்ச்சி தெரிவித்தனர். 
இதனால் அதிர்ச்சியும் கோபமும் கொண்ட உறுப்பினர்கள் அந்த ஐஏஎஸ் அதிகாரி மீது கடுமையாக வசைபாடினர். ஆனால் இதுகுறித்து அந்த  ஐ.ஏ.எஸ் எந்த விளக்கமும் தெரியவில்லை. இந்த பிரச்சனை மூத்த அதிகாரியின் கவனத்திற்கு செல்லவே விசாரிக்கப்பட்டார் அந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. பின்னர் மன்னிப்பு கேட்ட அவர அந்த படங்களை வாட்ஸ்அப் குழுவில் இருந்து நீக்கிவிட்டார். 
இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி அவரது இந்த பதிவு  “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறினார். இதையடுத்து அனைத்து குழு உறுப்பினர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அரசாங்கம் சார்ந்து தொடங்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் குழுவில் சொந்த விஷயங்களை பகிரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.