ஆபாசம்… ஆஸ்திரேலியா… அதிர்ச்சி தகவல்!

ஆபாசம்… ஆஸ்திரேலியா… அதிர்ச்சி தகவல்!

ஆஸ்திரேலியாவில் ஆபாச திரைப்படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஆபாசப்படம் பார்ப்பது இந்தியாவில் மட்டுமில்லை… உலகம் எங்கும் உள்ளது. தமிழகத்தில் ஆபாச படம் பார்த்தவர்கள் கைது செய்யப்படுவார்கள், பட்டியல் தயாராகி வருகிறது என்று தினம் தினம் பரபரப்பு பேட்டிகள் வந்துகொண்டிருக்கும் சூழலில், ஆஸ்திரேலியாவிலும் ஆபாச படங்களைக் காண்போர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதாக ஓய்வு முடிவு ஒன்று வெளியாகி உள்ளது.

mobile-viewer

கடந்த மூன்று ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் ஆபாச படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை மூன்று மடங்க அதிகரித்துள்ளதாம். மெல்போர்னில் மட்டும் 2014 – 17ம் ஆண்டுக்கு இடையே ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 222 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் ஐந்து சதவிகிதம் என்ற அளவுக்கு இதன் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாகவும், அதிகம் பேர் தங்கள் மொபைல் போனில் இருந்தே பார்ப்பதாகவும் தெரியவந்துள்ளது. 
என்ன மாதிரியான ஆபாச காட்சிகளை ஆஸ்திரேலிய மக்கள் பார்க்கிறார்கள் என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. லெஸ்பியன் ஒன்றுக்கும் அதிகமான ஜோடிகள் இணைந்து பாலியலில் ஈடுபடும் காட்சிகளையே அதிகம் பேர் பார்ப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஆபாச வீடியோவை ஆண்கள் மட்டுமே பார்ப்பது இல்லை, பெண்களும் பார்க்கிறார்கள் என்று இந்த ஆய்வு கூறுகிறது. ஆபாச தளங்களுக்கு வருபவர்களில் 30 சதவிகிதம் பேர் பெண்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகமும் அதிருப்தி தெரிவித்துள்ளது. பாலியல் ஆபாச வீடியோக்களை பார்ப்பதை தடுக்க முடியாது. ஆனால், சிறுவர்கள் இதுபோன்ற காட்சிகளைப் பார்ப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சூதாட்டம், ஆபாச தளங்களுக்குச் செல்லும்போது அவர்கள் முகத்தை ஸ்கேன் செய்து அவர்கள் ஆவணங்களைச் சரிபார்த்து அனுமதிப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் வகையில் தொழில்நுட்பத்தை அமல்படுத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் இந்த முறை அமல்படுத்தப்பட்ட பிறகு ஆபாச படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதை அவர்கள் கூட்டிக்காட்டியுள்ளனர்.