ஆபாசப் படம் பார்த்த ‘6500 பேர்’ லிஸ்ட் ரெடி.. காவல்துறையினரின் அதிரடி தகவல் !

 

ஆபாசப் படம் பார்த்த ‘6500 பேர்’ லிஸ்ட் ரெடி.. காவல்துறையினரின் அதிரடி தகவல் !

குழந்தைகள் பற்றிய ஆபாசவீடியோக்களை பார்க்கும் நபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அதன் பட்டியல் தயாராகி வருவதாகவும் ஏ.டி.ஜி.பி எம்.ரவி தெரிவித்திருந்தார். 

அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், குழந்தைகளின் ஆபாசப் படங்கள் பார்ப்பதிலும், பகிருவதிலும் தமிழகம் தான் முதலிடம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகக் காவல்துறைக்கு அறிக்கை அனுப்பியது. குழந்தைகள் பற்றிய ஆபாசவீடியோக்களை பார்க்கும் நபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அதன் பட்டியல் தயாராகி வருவதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி எம்.ரவி தெரிவித்திருந்தார். 

ttn

சமீபத்தில் வெளியான அந்த தகவலின் படி, மொத்தமாக 6500 பேர் ஆபாசப் படங்கள் பார்க்கும் பட்டியலில் இருப்பதாகவும், அதில் அதிகமாகக் கல்லூரி மாணவர்கள், மாணவிகள், அரசியல் பிரபலங்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த லிஸ்டை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்துப் பேசிய காவல்துறையினர், ” கட்சி பிரபலங்கள் அந்த லிஸ்டில் இருப்பதால் அவர்களிடம் எப்படி விசாரிப்பது என்று தெரியவில்லை. அதில் உள்ள அனைவரையும் உடனடியாக அழைத்து விசாரிக்க மாட்டோம். முதலில் தகவல் அளித்த பின்னர் முறையாக விசாரிப்போம். நாங்கள் யாரையும் செல்போனில் அழைத்து புகார் தெரிவிப்பதில்லை. அப்படி ஏதேனும் அழைப்பு வந்தால் அது குறித்து எங்களுக்குத் தகவல் கொடுங்கள். நாங்கள் விசாரணை மேற்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.