ஆபாசப் படங்கள் பார்ப்பவர்கள் லிஸ்ட் குறைந்துள்ளது.. ஏ.டி.ஜி.பி ரவி தகவல் !

 

ஆபாசப் படங்கள் பார்ப்பவர்கள் லிஸ்ட் குறைந்துள்ளது.. ஏ.டி.ஜி.பி  ரவி தகவல் !

ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்களின் லிஸ்டை காவல்துறை தயார் செய்தது.

ஆபாசப் படங்கள் பார்ப்பவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகக் காவல்துறைக்கு சில மாதங்களுக்கு முன்னர் தகவல் கொடுத்தது. அதுமட்டுமில்லாமல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கும் இது காரணமாக உள்ளது என்பதால் அந்த வீடியோக்கள் பார்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் படி அறிவுறுத்தியது. அதன் படி, ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்களின் லிஸ்டை காவல்துறை தயார் செய்தது.

thn

 இனிமேல், சிறார்களுக்கு எதிரான வீடியோக்களை பதிவேற்றம் செய்தால் 7 வருடம் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. இது தொடர்பாகத் திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் முதன் முதலாகக் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பல பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.  கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டது ஆபாச வீடியோக்கள் பார்ப்பவர்களை இன்னும் பீதி அடையச் செய்தது. 

ttn

இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஏடிஜிபி ரவி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆபாசப் படங்கள் பார்க்கக் கூடாது என்பது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வின் காரணமாகத் தமிழகத்தில் ஆபாசப் படங்கள் பார்ப்பவர்கள் பட்டியல் குறைந்துள்ளது என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட காவலன் செயலியை 15 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் குறைக்கும் பொருட்டு காவல்துறையினர் அனைத்து விதமான நடவடிக்கையும் எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.