ஆபாசப்படம் பிடித்து பெண்களை வேட்டையாடிய ரியல் எஸ்டேட் அதிபர்: ஜாமீன் வழங்க கூடாது என்று போராடும் மனைவி!?

 

ஆபாசப்படம் பிடித்து பெண்களை வேட்டையாடிய ரியல் எஸ்டேட் அதிபர்: ஜாமீன் வழங்க கூடாது என்று போராடும் மனைவி!?

பாலியல் குற்றச்சாட்டில் கைதாகியுள்ள கணவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அவரது மனைவி எதிர்மனு தாக்கல் செய்துள்ளார்.

ஈரோடு: பாலியல் குற்றச்சாட்டில் கைதாகியுள்ள கணவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அவரது மனைவி எதிர்மனு தாக்கல் செய்துள்ளார்.

ஈரோடு வில்லரசம்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன். இவர்   கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆபாசப் படம் எடுத்து மிரட்டி வருவதாகவும் ஈரோடு மகளிர் காவல்நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் புகார் அளித்தார்.  இதையடுத்து  புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராதாகிருஷ்ணன் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிந்து  அவரை கைது செய்து தற்போது சிறையில் அடைத்தனர்.

abvuse

இதைத் தொடர்ந்து ஈரோடு  எஸ்பி அலுவலகத்திற்கு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2 ஆம் தேதி வந்து  ராதாகிருஷ்ணன் தன்னையும்  மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகப் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘மதுப்பழக்கம் கொண்ட என் கணவரின் நண்பரான ராதாகிருஷ்ணன்  ஒருநாள்  என்னை  மயக்கி பாலியல் பலாத்காரம் செய்தார்.  தொடர்ந்து அதை வைத்தே  என்னை மிரட்டி மிரட்டி பலமுறை பாலியல்  பலாத்காரம் செய்து வந்தார்.  பழகிய நண்பரின் மனைவி என்றும் பாராமல் என்னை மிரட்டி மிரட்டி பலாத்காரம் செய்த இந்த ராதாகிருஷ்ணன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’  எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர்  பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. 

radhakrishnan

இந்நிலையில் ராதாகிருஷ்ணன் ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதை எதிர்த்து அவரது மனைவி லதா  மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ‘என் கணவர் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பான ஆபாச வீடியோக்களும் அவரிடம் உள்ளது. இந்த வழக்கில் போலீசார் ஒழுங்கான முறையில் விசாரணை நடத்தவில்லை. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள். அதனால் என் கணவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது’என்று  கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.