ஆபாசத்திற்கு எதிராக நடிகர் சேரன் ஆவேசம்!  முதல்ல சினிமாவை திருத்து வாத்தியாரே !? ரசிகர்கள் கலாய்!

 

ஆபாசத்திற்கு எதிராக நடிகர் சேரன் ஆவேசம்!  முதல்ல சினிமாவை திருத்து வாத்தியாரே !? ரசிகர்கள் கலாய்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் மிஸ்டர் க்ளீன் இமேஜ் நடிகர் கம் இயக்குநர் சேரனுக்கு கிடைத்திருக்கிறது. இவரது நடவடிக்கைகள் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்த ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் படு உற்சாகமாக சமூக நிகழ்வுகள் குறித்து நடிகர் சேரன் கருத்து தெரிவித்து வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் மிஸ்டர் க்ளீன் இமேஜ் நடிகர் கம் இயக்குநர் சேரனுக்கு கிடைத்திருக்கிறது. இவரது நடவடிக்கைகள் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்த ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் படு உற்சாகமாக சமூக நிகழ்வுகள் குறித்து நடிகர் சேரன் கருத்து தெரிவித்து வருகிறார். ரசிகர்களும் அவற்றை அதிகளவில் பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், இணையதளங்களில் போலி முகவரியை உபயோகித்து அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்வை சிதைக்கும் முயற்சியில் அல்லது காயப்படுத்தும் முயற்சியில் இறங்கும் வக்கிரமானவர்கள் இனிமேல் நிறுத்திக் கொள்ளட்டும்.

cheran

வளைதளங்களில் பெண்கள் இருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ளாமல் ஆபாச படங்களை வீடியோக்களை இணைக்கும் முகவரியற்ற முகங்களை அரசு சட்டப்படி தண்டிக்க ஆவண செய்யவேண்டும் என்று ஆபாச படங்களையும், செய்திகளையும் பதிவிடுபவர்களுக்கு எதிராக ஆவேசமாக கருத்து தெரிவித்து பதிவிட்டிருக்கிறார் நடிகர் சேரன். சேரனின் இந்த பதிவிற்கு, முதலில் நீங்கள் இயங்கி வரும் சினிமாத்துறையை சீர்படுத்துங்கள். தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகைகளை சமூக வலைத்தளங்களில் தங்களின் ஆபாசமான புகைப்படங்களைப் பதிவேற்றாமல் இருக்கச் சொல்லுங்கள் என்று ரசிகர்கள் ஆளாளுக்கு கலாய்த்து வருகிறார்கள்.