ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் குறைந்தது!

 

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் குறைந்தது!

இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.  

கொரோனாவால்  உலக நாடுகள் விழிபிதுங்கி உள்ளது. இதற்கு இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. கொரோனா வைரஸ் அச்சத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.  

இதுவொருபுறமிருக்க  இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இறக்குமதி குறைவினால் அதிகரித்து வந்த தங்க விலை  தங்கத்தின் விலை 33 ஆயிரத்தை அடைந்தது. இதுவே மக்கள் மத்தியில் எட்டாத கணியாக மாற தற்போது புதிய உச்சத்தை தொட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ttn

இந்நிலையில்  நேற்று  தங்கத்தின் விலை ரூ.36,176 ரூபாயாக  இருந்த நிலையில் 
ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை இன்று ரூ. 36, 072 ஆக குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 4,509 ஆக உள்ளது.