ஆபத்தை உணராத இளையதலைமுறை: டிக் டோக் மோகத்தால் பறிபோன 3 உயிர்!?

 

ஆபத்தை உணராத இளையதலைமுறை: டிக் டோக் மோகத்தால் பறிபோன 3 உயிர்!?

தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்துக் கொண்ட சிறுவர்கள் மூன்று   பேர் பரிதாபமாக  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 ஹரியானா: தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்துக் கொண்டஇளைஞர்கள்  மூன்று   பேர் பரிதாபமாக  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபக்கம் செல்பி ஒரு பக்கம் டிக் டோக் என  இளைஞர்கள் பலரும் ஆபத்தை உணராமல் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகளையும் விபரீதங்களையும்  அவர்கள் உணர்வதில்லை என்பதே வேதனைக்குரிய ஒன்று. 

selfie

அந்த வகையில்  ஹரியானா மாநிலத்தில் கடந்த 29 ஆம் தேதி  அங்குள்ள தண்டவாளத்தில் நின்று கொண்டு நான்கு பேர் டிக்டாக் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது, ரயில் அங்கு வரவே சுதாரித்துக்கொண்ட தினேஷ் என்பவர் மட்டும் அங்கிருந்து நகர்ந்துள்ளார். ஆனால்  மற்ற மூவர் அங்கிருந்து செல்வதற்குள் ரயில் அவர்கள்  மீது மோதியது. இதனால்  30 அடி தூரத்துக்கு அவர்களின் உடல் பாகங்கள் சிதறின.

train

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில், அரை மணி நேரத்துக்கும் மேலாக அவர்கள் அங்கு செல்பி எடுத்துக்கொண்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து சிதறிய உடல்பாகங்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.