ஆபத்தில் தமிழ் குழந்தைகள்… கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் அடைப்பு..!

 

ஆபத்தில் தமிழ் குழந்தைகள்… கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் அடைப்பு..!

கொரோனா வைரஸ் ஆபத்துடன் உள்ள ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற சீனர்களை மொத்தமாக இதே முகாமுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது ஆஸ்திரேலிய அரசு.

கொரோனா வைரஸ் ஆபத்துடன் உள்ள ஆஸ்திரேலியர்களை தொலைதூர தீவில் அடைக்கும் திட்டத்தால், தமிழ் குழந்தைகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறல்!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய வெளி நாட்டினர், அவரவர் நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். அந்த வகையில், ஆஸ்திரேலிய குடியுரிமை உள்ள சீனர்களை ஆஸ்திரேலிய அரசு அந்நாட்டுக்கு அழைத்து செல்ல்ல திட்டமிட்டுள்ளது. ஆனால், இவர்களை நாட்டுக்குள் அழைத்து செல்லாமல், கிறிஸ்துமஸ் தீவுகள் எனும் தொலைதூர இடத்தில் அடைக்க முயல்கிறது ஆஸ்திரேலிய அரசு.

ஆஸ்திரேலிய நிலப்பகுதியில் இருந்து 2600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிறிஸ்துமஸ் தீவில் – கோபிகா முருகப்பன் (வயது 4), தரூனிகா முருகப்பன் (வயது 2) எனும் இரண்டு குழந்தைகளும் அவர்களது பெற்றோரும் ஏற்கனவே ஆஸ்திரேலிய அரசால் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த தீவில் உள்ள அரசு முகாமில் இருப்பது இந்த 4 தமிழர்கள் மட்டும் தான். இந்நிலையில், கொரோனா வைரஸ் ஆபத்துடன் உள்ள ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற சீனர்களை மொத்தமாக இதே முகாமுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது ஆஸ்திரேலிய அரசு.korona

ஆஸ்திரேலியாவில், பூர்வீக பழங்குடியினர் தவிர மற்ற எல்லோருமே வந்தேறிகள் தான். ஆனால், வெள்ளையின ஆஸ்திரேலியர்களை நாட்டுக்குள் அனுமதிக்கும் அரசு, சீன ஆஸ்திரேலியர்களை மட்டும் தனித்தீவில் வைக்கிறது. அதே தீவில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் குழந்தைகளையும் ஆபத்தில் தள்ளுகிறது. இது ஒரு அப்பட்டமான இனவெறி அன்றி வேறல்ல.

 தமிழ் குழந்தைகளின் பெற்றோர் 2012 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக வந்தனர். 2018 ஆம் ஆண்டில் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால், ஆஸ்திரேலியாவில் பிறந்த குழந்தைகளை திருப்பி அனுப்பக் கூடாது என நீதிமன்றம் இடைக்கால அவசர உத்தரவு பிறப்பித்ததால் நடுவழியில் விமானத்தை இறக்கி மீட்கப்பட்டனர்.

ஆனாலும், அவர்களின் சொந்த ஊரான Bileola பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி, 2600 கிலோ மீட்டருக்கு அப்பால் தனித்தீவில் அடைத்துள்ளது ஆஸ்திரேலிய அரசு. இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 480 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளனர். இவர்களை மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரக் கோரி அந்நாட்டின் மனித உரிமை அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன. இந்த நான்கு பேரை தனியாக குடிவைக்க சுமார் 27 மில்லியன் டாலர் அதாவது சுமார் 200 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது ஆஸ்திரேலிய அரசு. கிறிஸ்துமஸ் தீவின் மொத்த மக்கள் தொகை 1400 பேர்.