ஆபத்தான வீடியோ: மும்பை போலீஸ்க்கு அட்வைஸ் பண்ண சித்தார்த்!

ஆபத்தான வீடியோ: மும்பை போலீஸ்க்கு அட்வைஸ் பண்ண சித்தார்த்!

நடிகர் சித்தார்த் சமூக வலைத்தளங்களில் எப்பவும் படு ஆக்டிவாக இருப்பார். எந்த மாதிரியான விஷயங்களாக இருந்தாலும், தனது கருத்தினை பகிரங்கமாகப் பகிர்வது அவரது வழக்கம். அதுபோல இம்முறை மும்பை போலீஸில் பொறுப்பற்ற செயல் குறித்த ட்வீட்டை பகிர்ந்துள்ளார்.

மும்பை போலீஸ் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பல வித்தியாசமான யுக்திகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பயங்கரமான செல்ஃபி எடுக்கணுமா? அல்லது பொறுப்பற்ற அட்வெஞ்சர் செய்யணுமா? இது எதுவா இருந்தாலும், ரிஸ்க் எடுக்க வேண்டாம். பாதுகாப்பு தான் முக்கியம் என குறிப்பிட்டு வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அதில் உயர்ந்த கட்டிடத்தின் உச்சியிலிருந்து செல்ஃபி எடுக்க முயன்ற நபர் தவறி கீழே விழும் படியான பயங்கரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பகிர்ந்திருந்தாலும், இத்தகைய ஆபத்தான வீடியோவை பகிரும் போது எவ்வித எச்சரிக்கையும் இன்றி பகிர்ந்தது, சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனைச் சுட்டிக்காட்டி சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆபத்தான வீடியோ என்ற எச்சரிக்கையுடன் ஒரு நபர் உயிரிழக்கும் காட்சிகளைப் பகிர்ந்திருக்கலாம். நல்ல நோக்கம் என்றாலும், அலட்சியமான செயல் என மும்பை போலீஸ் குறித்து சித்தார்த் பதிவு செய்துள்ளார்.