ஆன்லைன் விற்பனைக்கு பச்சைக் கொடி காட்டியது மத்திய அரசு – ஃபிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் விற்பனையை தொடங்க மும்முரம்

 

ஆன்லைன் விற்பனைக்கு பச்சைக் கொடி காட்டியது மத்திய அரசு – ஃபிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் விற்பனையை தொடங்க மும்முரம்

ஆன்லைன் முறையில் பொருட்களை விற்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லி: ஆன்லைன் முறையில் பொருட்களை விற்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோதே அத்தியாவசியம் அல்லாத பொருட்களை விற்க இ-காமர்ஸ் தளங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மிகவும் தேவையான பொருட்களை மட்டுமே இத்தனை நாட்களாக அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் மக்களிடம் விற்று வந்தன.

ttn

இந்நிலையில், நாடு முழுவதும் ஆன்லைன் முறையில் பொருட்களை விற்பதற்கு முழுமையான அனுமதியை மத்திய அரசு தற்போது வழங்கியுள்ளது. அதனால் இனி இ-காமர்ஸ் தளங்களில் அத்தியாவசியமற்ற பொருட்களை விற்க அந்நிறுவனங்கள் மும்முரமாக தயாராகி வருகின்றன. சிவப்பு, ஆரஞ்சு, சிவப்பு ஆகிய மூன்று மண்டலங்களிலுமே மக்களிடம் பொருட்களை டெலிவரி செய்ய இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களிடம் பொருட்களை டெலிவரி செய்ய முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.